சென்னை தனியார் மருத்துவமனையில் விஜயகாந்துக்கு மருத்துவ பரிசோதனை: இரவே வீடு திரும்பினார்

சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நலக்குறைவால் கடந்த சில ஆண்டுகளாக டாக்டர்கள் அறிவுரையின்படி வீட்டில் இருந்து ஓய்வு எடுத்து வருகிறார். மேலும் அவர் வெளிநாடு சென்று சிகிச்சை பெற்று தமிழகம் திரும்பினார். இந்நிலையில் கட்சி நிகழ்ச்சிகள் எதிலும் பங்கேற்காமல் வீட்டிலேயே ஓய்வு எடுத்து வந்தார். பெயளரவுக்கு நிகழ்ச்சியில் பங்கேற்று வந்தார். குறிப்பாக, சட்டசபை தேர்தல் நேரத்தில் கூட ஒரு சில தொகுதிகளில் வேனில் இருந்தவாறு பிரசாரம் செய்தார். அப்போது ஒரு சில வார்த்தைகளை மட்டும் பேசி கையசைத்து விட்டு சென்றார். தொடர்ந்து அவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு குணமடைந்து வீடு திரும்பினார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் காலை 11 மணியளவில் திடீரென சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக விஜயகாந்த் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் கூறப்பட்டது. ஆனால் என்ன காரணத்திற்காக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார் என்ற தகவல் வெளியாகவில்லை. விஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தகவல் கேட்டு தேமுதிகவினர் கடும் அதிர்ச்சியடைந்தனர். இதை தொடர்ந்து தேமுதிக தரப்பில் விஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்படவில்லை. வழக்கமான மருத்துவ பரிசோதனைக்கு தான் மருத்துவமனைக்கு சென்றார் என்றும் தெரிவிக்கப்பட்டது. மருத்துவ பரிwசோதனை முடிந்து அன்று இரவு 11 மணியளவில் அவர் வீடு திரும்பினார். வீட்டில் அவர் நலமுடன் இருக்கிறார் என்று தெரிவிக்கப்பட்டது.

Related Stories: