தீவிர சிகிச்சையில் கிறிஸ் கேர்ன்ஸ்

கான்பெரா: நியூசிலாந்து கிரிக்கெட் அணி முன்னாள் ஆல் ரவுண்டர் கிறிஸ் கேர்ன்ஸ் (51 வயது), இதயக் கோளாறு காரணமாக மயங்கி விழுந்ததை அடுத்து, ஆஸ்திரேலியாவின் கான்பெரா நகரில் உள்ள மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு அவசர அறுவைசிகிச்சை செய்யப்பட்டுள்ள நிலையில், கவலைக்கிடமாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நியூசிலாந்து அணிக்காக 1989 முதல் 2006 வரை விளையாடியுள்ள கேர்ன்ஸ், ஓய்வு பெற்ற பிறகு வர்ணனையாளராக பணியாற்றி வந்தார். அவர் 62 டெஸ்ட் போட்டியில் 3320 ரன் (அதிகம் 158, சராசரி 33.53, சதம் 5, அரை சதம் 22) மற்றும் 218 விக்கெட் எடுத்துள்ளார். 215 ஒருநாள் போட்டியில் 4950 ரன் (அதிகம் 115, சராசரி 29.46, சதம் 4, அரை சதம் 26) மற்றும் 201 விக்கெட் எடுத்துள்ளார். நியூசி. அணிக்காக 2 டி20 போட்டியில் மட்டுமே விளையாடி உள்ளார்.

Related Stories: