நாங்கள் 95 ரன் முன்னிலை பெற்றதால் இங்கிலாந்து பக்கம் அழுத்தம் திரும்பி உள்ளது: கே.எல்.ராகுல் பேட்டி

நாட்டிங்காம்: இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையே  முதல் டெஸ்ட் நாட்டிங்காமில் நடந்து வருகிறது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 183 ரன்னுக்கு ஆல்அவுட் ஆனது. பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி 2ம் நாள் ஆட்டநேர முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 124 ரன் எடுத்திருந்தது. 3வதுநாளான நேற்று இந்தியா 84.5 ஓவரில் 278 ரன்னுக்கு ஆல்அவுட் ஆனது. அதிகபட்சமாக கே.எல்.ராகுல் 84, ஜடேஜா 56, பும்ரா 28  ரன் எடுத்தனர். இங்கிலாந்து தரப்பில் ராபின்சன் 4, ஆண்டர்சன் 4 விக்கெட் வீழ்த்தினர்.

பின்னர் 95 ரன் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து விக்கெட் இழப்பின்றி 25 ரன் எடுத்திருந்தபோது மழையால் ஆட்டம் நிறுத்திக்கொள்ளப்பட்டது. இங்கிலாந்து 70 ரன் பின்தங்கிய நிலையில் இன்று 4வதுநாள் ஆட்டம் நடக்கிறது. இன்றும் 65 சதவீதம் மழை வர வாய்ப்பு இருப்பதால் ஆட்டம் பாதிக்கப்படும் சூழல் உள்ளது. நேற்று ஆட்டம் முடிந்த பின்னர் கே.எல்.ராகுல் கூறுகையில், முதல் இன்னிங்சில் நாங்கள் முன்னிலை பெற்றதால் இங்கிலாந்து பக்கம் அழுத்தம் திரும்பி உள்ளது. முதல் இன்னிங்சில் நாங்கள் செய்த அதே அழுத்தத்துடன் இன்று பந்துவீசுவோம், என்றார்.

Related Stories: