அனல்மின் நிலையத்தில் பாதுகாப்பற்ற நிலையில்  தளவாட பொருட்கள்

ஆர்.எஸ்.மங்கலம்:  ஆர்.எஸ்.மங்கலம் அருகே உள்ள உப்பூர், அனல் மின் நிலைய கட்டுமான பணிக்காக கொண்டு வரப்பட்டுள்ள இரும்பு தளவட பொருட்கள் திறந்த வெளியில் மழையிலும்,வெயிலிலும் கிடப்பதால் பொருட்கள் துருபிடித்து சேதமடைந்து வருகின்றது. இதனை பாதுகாப்பான முறையில் மூடி பொருட்களை பாதுகாக்க வேண்டும் என சமூக ஆர்ர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.  ஆர்.எஸ்.மங்கலம் அருகே உப்பூர் அனல் மின் நிலையத்தில் 1,600 மெகாவாட் மின் உற்பத்திக்கான அனல் மின் நிலைய பணிகள் நடைபெற்று வந்தது. இந்நிலையில் பசுமை தீர்ப்பாயத்தின் தடை உத்தரவால், கடந்த சில மாதங்களாக அனல் மின் நிலைய பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு இருந்தது. கடந்த நான்கு தினங்களுக்கு முன் உச்ச நீதிமன்றம் தடையை நீக்கியுள்ளது.

இந்நிலையில் அனல் மின் நிலைய பணிக்காக பல்வேறு பகுதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட இரும்பு ராடுகள் உருளைகள், கம்பிகள் உள்ளிட்ட தள வாடப்பொருட்கள் திறந்த நிலையில் வைக்கப்பட்டுள்ளதால் பொருட்கள் அனைத்தும் துருப்பிடித்து வீணாகி வருகிறது. இதனால் இந்த தளவாடப் பொருட்களின் உறுதி தன்மை இழந்து விடுமோ என்ற ஐய்யப்பாடு ஏற்பட்டுள்ளது. ஆகையல் பொருட்களை மூடி பாதுகாத்திட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Related Stories: