துருக்கியில் பச்சை நிறமாகிய வானம்: விண்கல் வெடித்ததா?

துபாய்: துருக்கியில் உள்ள இஸ்மிர் நகரத்தின் வான் பகுதியில் கண் கூச வைக்கும் வெளிச்சம் மற்றும்  பெரும் சத்ததோடு அடையாளம் தெரியாத பொருள் ஒன்று பூமி நோக்கி வந்து கொண்டிருந்த நிலையில்  வானில் மேக கூட்டங்களில் இடையே புகுந்து வெடித்து வான் பகுதி முழுவதும் பச்சை நிறத்தில் மாறியது. பின்னர் சிறு நெருப்பு பந்து போன்று தோன்றி மறைந்தது. இந்த அரிய நிகழ்வை அப்பகுதியை சேர்ந்த ஹலீல் இப்ராஹிம் என்பவர் வீடியோ பதிவாக எடுத்து டிவிட்டரில் வெளியிட்டார். துருக்கியில் கட்டுக்கடங்காமல் எரிந்துவரும் காட்டுத்தீயால் வனப்பகுதிகள் எரிந்து வரும் நிலையில் வைரலாக பரவிய இந்த வீடியோவை கண்ட மக்கள் டிவிட்டரில் அச்சத்தை வெளிப்படுத்தி பல்வேறு கருத்துக்களை வெளியிட்டனர்.ஆனால் இது  விண் கற்களில் ஒரு பகுதியாக இருக்கலாம் என துருக்கியில் உள்ள வானியல் ஆராச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Related Stories:

>