சீனாவில் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 302-ஆக உயர்ந்துள்ளதாக சீனா அரசு தகவல்

பெய்சிங்: சீனாவில் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 300-ஐ தண்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சீனாவில் ஆண்டுதோறும் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் ஏற்படும் பெரு வெள்ளத்தில் சிக்கி பலர் இறந்து போகின்றனர். மேலும் பொருட்களும் அதிக அளவில் சேதம் அடைகிறது.

இந்த நிலையில், மத்திய ஹெனான் மாகாணத்தில் கடந்த இரண்டு வாரமாக பலத்த மழை பெய்து வருகிறது. வரலாறு காணாத கனமழையால் ஜெங்ஜவ், ஜிங்ஜியாங், எனியாங் மற்றும் ஹெபி ஆகிய 4 நகரங்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. மேலும்,அதை தவிர பல்வேறு நகரங்களிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது.

இந்த நிலையில், ஹெனான் மாகாணத்தில் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 302-ஆக உயர்ந்துள்ளது. வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட 50 பேரைத் தேடும் பணி தீவிரமாக நடந்து வருவதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். ஜெங்ஜோ என்ற இடத்தில் சுரங்கப் பாதையில் வெள்ளநீர் புகுந்ததில் கார் நிறுத்துமிடத்தில் 39 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும் மழை மற்றும் வெள்ளம் காரணமாக ஒரு கோடியே 30 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 9 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் முற்றிலும் சேதமடைந்துள்ளதாகவும் சீன அரசு தகவல் தெரிவித்துள்ளது. வெள்ளத்தில் சிக்கிய ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மழை, வெள்ளத்தால் ஏற்பட்ட மொத்த பாதிப்பு விவரங்கள் இதுவரை வெளியாகவில்லை.

Related Stories: