ஆப்கன் பிரதமர் நம்பிக்கை ஆறு மாதங்களில் நிலைமை மாறும்

காபூல்: ஆப்கனில் நிலவி வரும் சூழல் 6 மாதங்களில் மாறிவிடும்’ என்று பிரதமர் அஷ்ரப் கனி நம்பிக்கை தெரிவித்துள்ளார். தலிபான்களை அழிப்பதற்காக ஆப்கானில் முகாமிட்டிருந்தது அமெரிக்க ராணுவம். ஏறக்குறைய 20 ஆண்டுகளாகிவிட்ட நிலையில் அமெரிக்க மற்றும் நேட்டோ நாடுகளின் படைகள் அங்கிருந்து படிப்படியாக வெளியேறி வருகின்றன. இதனால் ஆப்கானில் மீண்டும் தலிபான்களின் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது. பல்வேறு பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளனர். நேற்று முன் தினம் கந்தகார் விமானநிலையத்தின் மீதும் வான்வழித் தாக்குதலில் ஈடுபட்டனர்.    

ஆப்கனில் நிலவி வரும் இந்த பதற்றமான சூழலில், நேற்று காணொலி வழியே அமைச்சரவை கூட்டத்தில் பிரதமர் அஷ்ரப் கனி உரையாற்றினார். அப்போது அவர் கூறுகையில், ‘‘தலிபான்கள் குரூரமானவர்களாகவும், அடக்குமுறையாளர்களாகவும் உள்ளனர். அவர்கள் அமைதியையோ, வளர்ச்சியையோ விரும்புவதில்லை. மக்களுக்கும், அரசுக்கும் அடிபணிந்து தலிபான்கள் சரணடைய வேண்டும். அர்த்தமுள்ள பேச்சுவார்த்தையை தலிபான்கள் முன்னெடுக்காத வரையில் போரை தவிர்க்க முடியாது என்ற நிலையில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். அதற்கு நாடு முழுவதும் ஒற்றுமையாக அணிதிரள வேண்டும். இந்த அசாதாரண சூழல் 6 மாதங்களில் தீர்க்கப்படும்’’ என்றார்.

Related Stories: