கொரோனா விதிமுறை மீறிய 2 ரெஸ்டாரண்டுக்கு சீல்

மாமல்லபுரம்: மாமல்லபுரத்தில் சமூக இடைவெளியை பின்பற்றாமலும், நேரக்கட்டுப்பாட்டை மீறி கடற்கரையை ஒட்டி உள்ள ரெஸ்டாரன்டுகள் செயல்படுவதாக செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத்துக்கு தொடர்ந்து புகார்கள் வந்தது. இதையடுத்து, அவரது உத்தரவின்பேரில், மாமல்லபுரம் வருவாய் ஆய்வாளர் ஜேம்ஸ், போலீஸ் இன்ஸ்பெக்டர் நடராஜன், பேரூராட்சி செயல் அலுவலர்  கணேஷ் (பொ) ஆகியோர் தலைமையில், துப்புரவு ஆய்வாளர் ரகுபதி, துப்புரவு மேற்பார்வையாளர் தாமோதரன், வருவாய்த்துறை, காவல்துறை மற்றும் பேரூராட்சி ஊழியர்கள் கடற்கரையொட்டி உள்ள மீனவர் பகுதி, கருங்குழியம்மன் கோயில் தெரு உள்ளிட்ட இடங்களில் 5க்கும் மேற்பட்ட ரெஸ்டாரன்டுகளில் நேற்று முன்தினம் நள்ளிரவு திடீர் சோதனை நடத்தினர். அப்போது, மீனவர் குப்பம் கடற்கரையையொட்டி உள்ள ஒரு தனியார் ரெஸ்டாரன்ட், கருங்குழியம்மன் கோயில் தெருவில் உள்ள ஒரு தனியார் ரெஸ்டாரன்டுகள் கொரோனா விதிமுறைகளை பின்பற்றாமலும், நேரக்கட்டுப்பாட்டை மீறியும் செயல்பட்டது தெரியவந்தது. உடனே வருவாய்த்துறையினர் 2 ரெஸ்டாரண்டுக்கும் அதிரடியாக சீல் வைத்தனர். மேலும், 3 ரெஸ்டாரன்களுக்கு ரூ.15 ஆயிரம் அபராதம் விதித்தனர்.

Related Stories: