100 மீட்டர் ஓட்டம் இத்தாலி வீரருக்கு தங்கம்

உலகின் புதிய அதிவேக மனிதராக இத்தாலியின் லமான்ட் மார்செல் ஜேக்கப்ஸ் (26 வயது) முத்திரை பதித்துள்ளார். தொடர்ச்சியாக 3 ஒலிம்பிக் போட்டியில் ஆதிக்கம் செலுத்தி வந்த ஜமைக்கா நட்சத்திரம் உசேன் போல்ட் ஓய்வுக்குப் பிறகு இந்த பெருமையை பெறப்போகும் வீரர் யார் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த நிலையில், டோக்கியோ ஒலிம்பிக்சில் நேற்று நடந்த ஆண்கள் 100 மீட்டர் ஓட்டம் பைனலில் மார்செல் ஜேக்கப்ஸ் 9.80 விநாடியில் பந்தய தூரத்தைக் கடந்து தங்கப்பதக்கம் வென்றார். அமெரிக்காவின் பிரெட் கெர்லி (9.84 விநாடி) வெள்ளிப் பதக்கமும், கனடாவின் ஆந்த்ரே டி கிராஸே (9.89 விநாடி) வெண்கலமும் வென்றனர். டி கிராஸே ரியோ ஒலிம்பிக்சிலும் வெண்கலம் வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories:

>