ரூ.10 லட்சம் பறிப்பு வழக்கில் தலைமறைவான பெண் இன்ஸ்பெக்டரை பிடிக்க 5 தனிப்படை அமைப்பு

மதுரை: சிவகங்கை மாவட்டம் இளையான்குடி இந்திரா நகரைச் சேர்ந்தவர் அர்ஷத் (32). பை வியாபாரி. இவர் சொந்த தொழில் தொடங்க ரூ.10 லட்சத்தை எடுத்துக் கொண்டு, இளையான்குடியில் இருந்து காரில், மதுரை மாவட்டம், திருமங்கலத்தை சேர்ந்த பாண்டியிடம், வட்டிக்கு பணம் வாங்க கடந்த ஜூலை 5ம் தேதி சென்றார். நாகமலை புதுக்கோட்டை - தேனி மெயின் ரோட்டில் காத்திருந்தார். அப்போது பாண்டி, அவரது நண்பர் கார்த்திக் மற்றும் வயதான ஒருவர் வந்துள்ளனர். இவர்கள் மற்றும் அர்ஷத்தை, நாகமலை புதுக்கோட்டை இன்ஸ்பெக்டர் வசந்தி, அவரது டிரைவர் காரில் ஏற்றி அழைத்துச் சென்றனர். வழியில் அர்ஷத்தின் பணப்பையை பறித்துக் கொண்டு மிரட்டி அனுப்பினர். இதுகுறித்த புகாரில், இன்ஸ்பெக்டர் வசந்தி உட்பட 5 பேர் மீது 5 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இன்ஸ்பெக்டர் வசந்தி சஸ்பெண்ட் செய்யப்பட்டார். விசாரணைக்காக இன்ஸ்பெக்டர் வசந்தியை அழைக்கச் சென்றபோது, அவர் தலைமறைவாக இருப்பது தெரியவந்தது. வசந்தி உட்பட 5 பேரை பிடிக்க  5 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இப்படையினர் 5 பேரையும் தேடி வருகின்றனர். இதற்கிடையே வசந்தி முன்ஜாமீன் கேட்டு ஐகோர்ட் கிளையில் மனுசெய்துள்ளார்.

Related Stories:

>