அமெரிக்காவின் மத சுதந்திர தூதராக இந்தியர் நியமனம்

வாஷிங்டன்: அமெரிக்க அதிபராக ஜோ பைடன் பதவியேற்றபிறகு, இந்திய வம்சாவளியினர் பல்வேறு தலைமைப் பொறுப்புகளை பெற்று வருகிறார்கள். இதன் அடுத்த கட்டமாக இந்திய-அமெரிக்க வழக்கறிஞரான ரஷாத் ஹூசைனை சர்வதேச மத சுதந்திரத்துக்கான தூதராக நியமிக்க பைடன் பரிந்துரைத்துள்ளார். ‘மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இந்த பதவிக்கு இஸ்லாமியர் ஒருவர் நியமிக்கப்படுவது இதுவே முதன்முறை’ என்று வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. 41 வயதான ஹுசைன் தற்போது தேசிய பாதுகாப்பு கவுன்சிலில் கூட்டாண்மை மற்றும் உலகளாவிய ஈடுபாட்டிற்கான இயக்குநராக உள்ளார்.

Related Stories:

>