பேருந்துகள் வாங்கியதில் கெஜ்ரிவால் அரசு ஊழல்!: டெல்லியில் காங், பா.ஜ.க. தனித்தனியே போராட்டம்..!!

டெல்லி: டெல்லி மாநிலத்தில் பேருந்துகள் வாங்கியதில் கெஜ்ரிவால் அரசு ஊழல் செய்ததாக கூறி காங்கிரஸ் மற்றும் பாரதிய ஜனதா கட்சியினர் தனித்தனியே போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. முதலமைச்சர் கெஜ்ரிவால் வீட்டின் அருகே திரண்ட காங்கிரஸ் தொண்டர்கள், அரசை கண்டித்து முழக்கம் எழுப்பியபடி அவரது இல்லம் நோக்கி ஊர்வலமாக சென்றனர். அப்போது தடுப்புகளை மீறி செல்ல முயன்ற அவர்களை போலீசார் தடுத்ததால் போலீசாருக்கும், தொண்டர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

இதேபோன்று பேருந்துகள் வாங்கியதில் ஊழல் மற்றும் கொரோனா நிவாரண பணியில் ஊழல் நடந்ததாக கூறி முதல்வர் கெஜ்ரிவாலை கண்டித்து டெல்லி மாநில பாரதிய ஜனதா கட்சியினர் சட்டமன்றம் நோக்கி கண்டன பேரணி சென்றனர். இந்த பேரணியில் பங்கேற்றவர்கள் கெஜ்ரிவால் அரசை கண்டித்து முழக்கம் எழுப்பினர்.

Related Stories:

>