ரூ.63 ஆயிரம் மதிப்பு குட்கா பறிமுதல்: 37 பேர் கைது

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்ட பகுதிகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் போதை பொருட்கள் விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க காஞ்சிபுரம் சரக காவல் துணை தலைவர் சத்யபிரியா போலீசாருக்கு அறிவுறுத்தியுள்ளார். அதன்பேரில் காஞ்சிபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுதாகர் உத்தரவின்படி, காஞ்சிபுரம் மற்றும் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள பகுதிகளில் உள்ள பெட்டிக் கடைகளில் போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது, தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா போதை பொருட்கள் விற்பனைக்காக வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து, 37 நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது  செய்தனர். மேலும், விற்பனைக்காக வைத்திருந்த ரூ.63 ஆயிரம் மதிப்பிலான குட்கா போதைப் பொருட்களை போலீசார் கைப்பற்றினர்.

Related Stories:

>