ஆடுகள் மர்மச்சாவு

வருசநாடு: வருசநாடு அருகே, ஆடுகள் மர்மமான முறையில் இறந்தது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர். தேனி மாவட்டம், வருசநாடு அருகே சிங்கராஜபுரம் ஊராட்சிக்குட்பட்ட பெரியசாந்திபுரத்தை சேர்ந்தவர் அம்சமணி. விவசாயி. ஆடுகள் வளர்த்து வருகிறார். இவர் நேற்றிரவு தனது 20 செம்மறி ஆடுகளை குடிக்க தண்ணீர் வைத்து விட்டு, கொட்டத்தில் அடைத்து கொண்டிருந்தார். ஆனால் தண்ணீர் குடித்த சிறிது நேரத்தில் ஒன்றன்பின் ஒன்றாக 14 ஆடுகள் மர்மமான முறையில் உயிரிழந்தன. மீதமுள்ள 6 ஆடுகள் உயிரிழக்கும் நிலையில் உள்ளன.

இதனால் அதிர்ச்சியடைந்த அம்சமணி, இது குறித்து வருசநாடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்த ஆடுகளை உடல் கூராய்வு செய்து, தண்ணீர் மற்றும் உடல் உள்ளுப்புகளை இன்று ஆய்வுக்கு அனுப்ப உள்ளனர். இந்நிலையில் கிராமத்தில் சந்தேகப்படும்  வகையில் திரியும் அடையாளம் தெரியாத நபர்களிடம் எஸ்ஐ அருண்பாண்டி தலைமையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories:

>