பாடியில் நள்ளிரவு சரக்கு ஆட்டோ எரிப்பு

ஆவடி: பாடியில் நள்ளிரவு சரக்கு ஆட்டோ எரிக்கப்பட்டதால் பரபரப்பு நிலவியது. சென்னை கொரட்டூர்  திருவள்ளுவர் 3வது தெருவை சேர்ந்தவர் அனீபா (76). இவர் சரக்கு ஆட்டோ ஓட்டி வருகிறார். நேற்றிரவு சவாரியை முடித்துவிட்டு பாடி மஞ்சகுப்பம் சர்ச் சாலையோரமாக தனது வண்டியை நிறுத்திவிட்டு வீட்டுக்கு சென்றுவிட்டார்.  நள்ளிரவு 1 மணி அளவில் சரக்கு ஆட்டோ எரிந்துகொண்டிருப்பதாக கிடைத்த தகவல்படி, அனீபா அங்கு விரைந்தார்.

எரிந்து கொண்டிருந்த ஆட்டோ மீது தண்ணீர் ஊற்றியபோதும் தீயை கட்டுப்படுத்த முடியவில்லை. இதுபற்றி சென்னை எழும்பூரில் உள்ள தீயணைப்பு கட்டுப்பாட்டு நிலையத்துக்கு தகவல் கொடுத்தார். இதையடுத்து வில்லிவாக்கத்தில் இருந்து தீயணைப்பு வீரர்கள் வந்து தீயை அணைத்தனர். இருப்பினும் ஆட்டோவின் பெரும்பகுதி எரிந்து நாசமானது.புகாரின்படி, கொரட்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Related Stories:

>