ஓசூரில் நோய் தடுப்பு நடவடிக்கை ஒரே கட்டமாக 1 லட்சம் தொழிலாளருக்கு தடுப்பூசி-அமைச்சர் சுப்பிரமணியன் தகவல்

கிருஷ்ணகிரி : ஓசூர் மாநகராட்சி பகுதியில் சுமார் 1 லட்சம் தொழிலாளர்களுக்கு ஒரே கட்டமாக பெரு நிறுவன சமூக பொறுப்பு நிதியின் கீழ் தடுப்பூசிகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தமிழக கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் காந்தி ஆகியோர் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று சுற்றுப்பயணம் செய்து ஆய்வு பணியில் ஈடுபட்டனர்.

அப்போது, பர்கூர் பேரூராட்சியில் அமைக்கப்பட்டுள்ள காய்ச்சல் சிகிச்சை முகாமில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் மருத்துவ சிகிச்சைகளை பார்வையிட்டனர். பர்கூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஜெகதேவி, மேம்படுந்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ₹35 லட்சம் மதிப்பில் ஆக்சிஜன் உற்பத்தி கருவியின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்து, கர்ப்பிணி மற்றும் பிரசவித்த தாய்மார்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்கப்படுவதை பார்வையிட்டனர். பின்னர். போலுப்பள்ளியில் கட்டப்பட்டு வரும் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கட்டுமான பணிகளை ஆய்வு செய்தனர்.

தொடர்ந்து காமன்தொட்டி துணை சுகாதார நிலையத்தில் ₹2.50 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பல்வேறு புதிய கட்டிடங்களை அமைச்சர்கள் திறந்து வைத்தனர். இதையடுத்து, ஓசூர் அரசு மருத்துவமனையில் முதலஅமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் காது கேட்கும் கருவி, குழந்தைகளுக்கு நுரையீரல் அழற்சி நோய் தடுப்பு மருந்து வழங்கும் நிகழ்ச்சியை நடந்தது. இதில் அமைச்சர்கள் கலந்து கொண்டு காது கேட்கும் கருவியை வழங்கி, குழந்தைகளுக்கு நோய் தடுப்பு மருந்தை வழங்கினார்கள். மாலை கெலமங்கலம் ஊராட்சி ஒன்றியம் கொடகரை, பெட்டமுகிலாளம் கிராமத்தில் மலை வாழ் மக்களுடன் அமைச்சர்கள் கலந்துரையாடும் நிகழ்ச்சி நடந்தது.

முன்னதாக கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகத்தில் நடந்த ஆய்வு கூட்டத்தில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசுகையில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனா தொற்று பெருமளவில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. 3வது அலை ஒரு வேளை வந்தால் அதை எதிர்கொள்ள தேவையான படுக்கை வசதிகள் மருத்துவமனைகளில் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இந்த மாவட்டத்தில் 12 ஊராட்சிகளில் உள்ள பொதுமக்களுக்கு 100 சதவீதம் கொரோனா தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது. ஓசூர் மாநகராட்சி பகுதியில் சுமார் 1 லட்சம் தொழிலாளர்களுக்கு ஒரே கட்டமாக பெரு நிறுவன சமூக பொறுப்பு நிதியின் கீழ் தடுப்பூசிகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.

 ஓசூரில் ஆய்வின்போது, கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட திமுக செயலாளர் பிரகாஷ் எம்எல்ஏ, கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாய் சரண் தேஜஸ்வி, மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் மணிமேகலை நாகராஜ், பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத்துறை இயக்குநர் செல்வவிநாயகம், மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்குநர் குருநாதன், மருத்துவக்கல்வி இயக்குநர் நாராயணபாபு, மாவட்ட வருவாய் அலுவலர் சதீஸ், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் பெரியசாமி, சார் ஆட்சியர் நிஷாந்த் கிருஷ்ணா, ஓசூர் மாநகராட்சி ஆணையர் செந்தில்முருகன், கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் அசோகன், மருத்துவப்பணிகள் இணை இயக்குநர் பரமசிவன், சுகாதாரப்பணிகள் துணை இயக்குநர் கோவிந்தன், திமுக மாவட்ட அவைத்தலைவர் யுவராஜ், தலைமை செயற்குழு உறுப்பினர் சுகுமாரன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் சீனிவாசன், முன்னாள் நகரமன்ற தலைவர் மாதேஸ்வரன், இலக்கிய அணி மாவட்ட அமைப்பாளர் எல்லோரா மணி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

சூளகிரி: சூளகிரி பகுதியில் ஆய்வு பணியில் ஈடுபட்ட அமைச்சர்கள் சாமனப்பள்ளி சுகாதார நிலையத்தில் நோயாளிகளை நேரில் சந்தித்து குறைகளை கேட்டறிந்தனர். தொடர்ந்து காமன்தொட்டியில் சுகாதார நிலையத்தை திறந்து வைத்து. ₹2.50 கோடி மதிப்பிலான திட்டப்பணிகளை துவக்கி வைத்தனர். மேலும், கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களை வழங்கினர். நிகழ்ச்சியில் கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி, தேசிய சுகாதார திட்ட இயக்குனர் மருத்துவர் தாரேஷ் அகமது, எம்எல்ஏக்கள் பிரகாஷ், மதியழகன், ராமச்சந்திரன், முன்னாள் எம்எல்ஏக்கள் செங்குட்டுவன், முருகன், திமுக நிர்வாகிகள் ஷேக் ரஷீத், வீரா ரெட்டி, ஜெயராமன், நாகேஷ், வெங்கடேஷ், சீனிவாசன், பாக்கியராஜ், அருணா, பூசன்குமார், ஞானசேகரன், வேல்முருகன், பிஆர்ஓ ராம்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Related Stories: