நெமிலி பேரூராட்சியில் 2020ம் ஆண்டில் ₹50 லட்சத்தில் புதிதாக கட்டப்பட்ட மேல் நீர்த்தேக்க தொட்டி-பயன்பாட்டுக்கு கொண்டுவர கோரிக்கை

நெமிலி : நெமிலி பேரூராட்சியில் ₹50 லட்சத்தில் புதிதாக கட்டப்பட்ட மேல் நீர்த்தேக்க தொட்டியை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் அப்பகுதிமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி பேரூராட்சியில் மொத்தம் 15 வார்டுகள் உள்ளது. இந்த வார்டுகளில் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். அவர்களுக்கு நீண்ட காலமாக குடிநீர் பிரச்னை இருந்து வந்துள்ளது. இதனால், இப்பகுதிமக்கள் மேல் நீர்த்தேக்க தொட்டி அமைக்க வேண்டும் ேபரூராட்சி அதிகாரிகளிடம் கடந்த சில ஆண்டுகளுக்கு பலமுறை கோரிக்கை மனு அளித்தனர். இந்த கோரிக்கை மனுவை ஏற்ற அதிகாரிகள் மிக விரைவில் மேல்நீர்த்தேக்க தொட்டி கட்டிதரப்படும் என தெரிவித்தனர்.

இதையடுத்து, மூலதனநிதி திட்டத்தின்கீழ் 2019-2020ம் ஆண்டு நெமிலி பேரூராட்சிக்குட்பட்ட மேட்டுக்காலனி பகுதியில் ₹50 லட்சம் மதிப்பீட்டில்  1 லட்சம் கொள்ளளவு கொண்ட மேல் நீர்த்தேக்க தொட்டி கடந்த சில மாதங்களுக்கு முன்பு கட்டப்பட்டது. ஆனால், இதுவரை இந்த மேல் நீர்த்தேக்க தொட்டி பொதுமக்களின்  பயன்பாட்டுக்கு கொண்டு வரவில்லை. அதனால், பொதுமக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.எனவே, மேல் நீர்த்தேக்க தொட்டியை உடனடியாக   பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்று அப்பகுதிமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: