டோக்கியோ ஒலிம்பிக்: வெள்ளி வென்றார் மீராபாய் சானு..! பிரதமர் மோடி, முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து

டெல்லி: மீராபாய் சானுவின் வெற்றி ஒவ்வொரு இந்தியருக்கும் உத்வேகம் அளிக்கும் என்று பிரதமர் மோடி புகழாரம் தெரிவித்துள்ளார். மேலும் வெள்ளிப்பதக்கம் வென்ற மீராபாய் சானுவுக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். ஜப்பானில் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கி கோலாகலமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், பெண்களுக்கான பளுதூக்குதல் 49 கிலோ எடைப்பிரிவில் எடைப்பிரிவில் இந்திய வீராங்கனை மீராபாய் சானு வெள்ளி பதக்கம் வென்றுள்ளார். இதனையடுத்து, டோக்கியோ ஒலிம்பிக் பதக்க பட்டியலில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. மீராபாயின் இந்த சாதனையை பாராட்டி, பிரதமர் மோடி, குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், முக.ஸ்டாலின்  உட்பட பல தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

முதல்வர் மு.க.ஸ்டாலின்

தமிழக முதலவர் மு.க.ஸ்டாலின் அவர்கள், மீராபாய் சாணுவுக்கு வாழ்த்து தெரிவித்து ட்வீட் செய்துள்ளார். அந்த பதிவில், ஒலிம்பிக்கின் முதல் நாளிலேயே இந்தியாவுக்கு ஒரு பிரகாசமான ஆரம்பம். மீராபாய் சாணுவுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் என பதிவிட்டுள்ளார்.

பிரதமர் மோடி

பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், “டோக்கியோ ஒலிம்பிக்கில் இதைவிட மகிழ்ச்சியான தொடக்கத்தைக் கேட்டிருக்க முடியாது. மீராபாயின் அற்புதமான செயல் திறனைக் கண்டு இந்தியா மகிழ்ச்சி அடைகிறது. அவரது வெற்றி அனைத்து இந்தியர்களுக்கும் ஓர் உத்வேகம்” என்று பதிவிட்டுள்ளார்.

ராகுல்காந்தி

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், “ஒலிம்பிக்கின் முதல் நாளிலேயே இந்தியாவுக்குப் பதக்கம் வென்று தந்த மீராபாய்க்கு வாழ்த்துகள். தனது மகளால் இந்தியா பெருமை கொள்கிறது என்று பதிவிட்டுள்ளார்.

Related Stories: