அரியவகை நோய் பாதிப்பால் சாவு குழந்தைக்கு சிகிச்சை அளிக்க திரட்டிய ரூ.16.5 கோடி எங்கே?....கேரள அரசுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி

திருவனந்தபுரம்: கேரளாவில் அரியவகை நோயால் இறந்த குழந்தையின் சிகிச்சைக்காக திரட்டப்பட்ட ரூ.16.5 கோடி பணம் என்ன ஆனது என்பது குறித்து  விளக்கம்  அளிக்கும்படி கேரள அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பிறக்கும்  குழந்தைகளுக்கு ‘முதுகெலும்பு தசைநார் சிதைவு’ என்ற அரியவகை நோய், 10  ஆயிரத்தில் ஒரு  குழந்தைக்கு ஏற்படுவது உண்டு. இதில் பாதித்தால் கை,  கால்கள் செயலிழந்து  விடும். இந்நோய்க்கு சிகிச்சை அளிக்கும் மருந்தின் விலை ரூ.18 கோடியாகும். இந்நிலையில், கேரள மாநிலம், ேகாழிக்கோடு அருகே அங்காடிபுரம் பகுதியை சேர்ந்த ஆரிப்  என்பவரின் 6 மாத  குழந்தையான இம்ரான் முகமதுவுக்கு இந்த நோயால் பாதிப்பு ஏற்பட்டது. இதன் சிகிச்சைக்காக, ஆன்லைன் நன்கொடை மூலமாக ரூ.16.5 கோடி திரட்டப்பட்டது.  சிகிச்சைக்கான ஏற்பாடு செய்யப்பட்ட நிலையில், 2 நாட்களுக்கு முன் குழந்தை திடீரென இறந்தது.

இந்நிலையில், இந்த நோயால்  பாதிக்கும் குழந்தைகளின் சிகிச்சைக்கு அரசு உதவி செய்ய உத்தரவிடக் கோரி கேரள உயர் நீதிமன்றத்தில் ஏராளமான மனுக்கள்  தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இவற்றை தலைமை நீதிபதி மணிக்குமார் அமர்வு நேற்று விசாரித்தது. அப்போது,  குழந்தை இம்ரான் முகமதுவின் சிகிச்சைக்காக திரட்டப்பட்ட ரூ.16.5  கோடி என்ன ஆனது? என்பது குறித்து கேரள அரசு விளக்கம் அளிக்க வேண்டும். இந்த பணத்தை உதவி தேவைப்படும் மற்ற குழந்தைகளுக்காக செலவு செய்வது  குறித்து அரசு ஆலோசிக்க வேண்டும். இது தொடர்பாக வரும் 26ம் ேததிக்குள் முடிவு எடுக்க வேண்டும்,’ என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Related Stories: