மாமல்லபுரத்தில் திடீர் கடல் சீற்றம்: மீனவர்கள் அச்சம்

மாமல்லபுரம்: மாமல்லபுரத்தில் நேற்று முன்தினம் இரவு முதல் கடல் சீற்றத்துடன் காணப்பட்டது. மாமல்லபுரம் மற்றும் சுற்றுவட்டார மீனவ குப்பங்களில் நேற்று காலை திடீரென கடல் சீற்றம் அதிகரித்தது. இந்த சீற்றத்தால் மாமல்லபுரம் குப்பம், வெண்புருஷம், கொக்கிலமேடு குப்பம், புதிய கல்பாக்கம், புதுஎடையூர் குப்பம், பட்டிபுலம் குப்பம், நெம்மேலிகுப்பம், தெற்குபட்டு, திருவிடந்தை ஆகிய பகுதிகளில் உள்ள பெரும்பாலான மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. சில மீனவர்கள் மட்டுமே கடலுக்கு சென்றனர்.

சுமார் 10 அடி உயரத்துக்கு ராட்சத அலை கரைப்பகுதி வரை நோக்கி வந்தன. மேலும், மாமல்லபுரம் கடற்கரையில் மிதமான வேகத்தில் காற்று வீசியது. மாமல்லபுரத்தை பொறுத்தவரை சிறிது நேரம் வெயிலும், சிறிது நேரம் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. இதனால் அச்சமடைந்த மீனவர்கள், தங்களது படகுகள், மீன்பிடி வலைகளை பத்திரமாக எடுத்து வந்து பாதுகாப்பான இடத்தில் வைத்தனர். காற்றில் படகுகள் ஒன்றோடொன்று மோதி சேதமடையாமல் இருக்க, கயிறு கட்டி பத்திரமாக கரையோரம் நிறுத்தி வைத்தனர்.

Related Stories:

>