கவுண்டி அணியுடன் பயிற்சி போட்டி டிரா: காயத்தால் நாடு திரும்பும் சுந்தர்

டர்ஹாம்: இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையே 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட்  தொடரில் முதல் போட்டி வரும் 4ம் தேதி தொடங்குகிறது. அதற்கு முன்பாக டர்ஹாமில் கவுண்டி செலக்ட் லெவன் அணியுடன் 3 நாள் பயிற்சி போட்டியில் இந்திய அணி ஆடியது. இதில்  முதல் இன்னிங்சில் முறையே இந்தியா 311, கவுண்டி அணி 220 ரன்கள் எடுத்தது. கடைசி நாளான நேற்று இந்தியா 3 விக்கெட் இழப்பிற்கு 192 ரன் எடுத்து டிக்ளேர் செய்தது. 284 ரன் முன்னிலையுடன் 2வது இன்னிங்சை தொடங்கிய கவுண்டி அணி 15.5 ஓவரில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 31 ரன் எடுத்திருந்தபோது போட்டி டிராவில் முடித்துக்கொள்ளப்பட்டது.

இதனிடையே கவுண்டி லெவன் அணியில் வீரர்கள் பற்றாக்குறையால் இந்தியாவின் வாஷிங்டன் சுந்தர், வேகப்பந்து வீச்சாளர் அவேஷ்கான் கவுண்டி அணிக்காக ஆடினர். இதில் பேட்டிங்கின் போது முகமது சிராஜ் வீசிய பந்தில் சுந்தரின் கைவிரலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. காயம் குணமாக 5 வாரம் ஆகும் என்பதால் அவர் நாடு திரும்புகிறார். இதேபோல் பந்துவீச்சின் போது காயம் அடைந்த அவேஷ்கான், காயம் காரணமாக இந்தியா திரும்புகிறார். ஏற்கனவே காயம் காரணமாக சுப்மான்கில்லும் நாடு திரும்புவது குறிப்பிடத்தக்கது.

Related Stories: