நேற்று சரிவு..இன்று உயர்வு!: சென்னையில் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.128 உயர்வு..கலக்கத்தில் இல்லத்தரசிகள்..!!

சென்னை: சென்னையில் இன்று தங்கம் விலை உயர்வை கண்டுள்ளது. இன்று காலை நிலவரப்படி ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.128 உயர்த்திருப்பது நகை பிரியர்களை கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது. தங்கம் விலையானது தினமும் மாறுபாடு காணப்படுகிறது. ஒருநாள் சரிவதும், மறுநாளே உயர்வதும் தங்கத்தின் வாடிக்கையாகும். தங்கம் பெண்களுக்கு மிகவும் பிடித்தமான ஒன்று. தென் இந்தியாவில் அதிகளவிலான தங்கத்தை வைத்துள்ள மாநிலத்தில் தமிழ்நாடு முன்னிலையில் உள்ளது. மேலும் தமிழ்நாட்டு பெண்களின் தங்க நகைகள் மீதான மோகம் மிகவும் அதிகம். தமிழ்நாட்டில் சென்னை போன்ற முக்கிய நகரங்களில் தங்கத்தின் வர்த்தகமும் அதிகம் என்றே கூறலாம்.

சென்னையில் நேற்று ஆபரணத் தங்கத்தின் விலையானது சவரனுக்கு ரூ.320 குறைந்து, ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.4,490க்கும், சவரன் ரூ.35,920க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் தங்கம் விலை இன்று அதிரடி உயர்வாக சவரனுக்கு ரூ.128 உயர்ந்துள்ளது. ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.4,506க்கும் சவரன் ரூ.36,048க்கும் விற்பனையாகிறது. நேற்று சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி ரூ.71.60க்கு விற்பனையானது. இன்று சற்று அதிகரித்து சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி ரூ.72.30க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆவணி, புரட்டாசி மாதத்தில் அதிக அளவில் திருமணம் நடைபெறுவது வழக்கம். இந்த நேரத்தில் தங்கம் விலை உயர்வு அடைந்திருப்பது பெற்றோர்கள் மத்தியில் சற்று அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories:

>