நீலகிரி 2வது சீசனுக்காக தொட்டபெட்டா தேயிலை பூங்காவில் ஜெகரண்டா, செண்பக மரங்கள் நடவு

ஊட்டி: ஊட்டி அருகேயுள்ள தொட்டபெட்டாவில், தோட்டக்கலைத்துறைக்கு சொந்தமான தேயிலை பூங்கா உள்ளது. இங்கு தேயிலை தோட்டம், பல்வேறு சோலை மரங்கள் மற்றும் பேரிக்காய் போன்ற பழ மரங்கள் அதிகளவு உள்ளது. இதுதவிர, பெரிய புல் மைதானம் உள்ளது.  இரண்டாம் சீசனுக்காக இப்பூங்கா தற்போது தயார் செய்யப்பட்டு வருகிறது.

மேலும், பூங்காவில் நுழைவு வாயில் முதல் பெரிய புல் மைதானம் மற்றும் சிறிய புல் மைதானங்களை சுற்றிலும் தற்போது அலங்கார மரங்கள் நடவு செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக, ஜெகரண்டா மற்றும் செண்பக மரங்கள் நடவு செய்யப்பட்டுள்ளன. மேலும், இந்த மரங்கள் நடைபாதைகளின் ஓரங்களிலும் நடவு செய்யப்பட்டள்ளது. மரங்கள் பெரிதாகி பூக்கள் பூத்தால் அழகாக காட்சியளிக்கும்.

Related Stories: