இந்திய சிறையில் அடைக்கப்பட்டால் நிரவ் மோடி தற்கொலைக்கு வாய்ப்பு: லண்டன் நீதிமன்றத்தில் வாதம்

லண்டன்: வங்கி மோசடியில் கைதான நிரவ் மோடியை நாடு கடத்தினால், அவர் அங்கு தற்கொலை செய்துகொள்ள வாய்ப்புள்ளதாக, அவரது தரப்பில் நீதிமன்றத்தில் வாதம் முன் வைக்கப்பட்டது.  பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.13,000 கோடி கடன் மோசடியில் ஈடுபட்ட பிரபல வைர வியாபாரி நிரவ் மோடி (50), லண்டனுக்கு தப்பி சென்றார். நீதிமன்ற நடவடிக்கை மற்றும் இந்தியாவின் வேண்டுகோளின்பேரில், அவர் அங்கு கைது செய்யப்பட்டு தென்மேற்கு வென்ட்வொர்த் சிறையில் அடைக்கப்பட்டார். அவரை இந்தியாவுக்கு நாடு கடத்த கடந்த பிப்ரவரி மாதம் மாவட்ட நீதிமன்ற நீதிபதி சாம் கூசி உத்தரவிட்டார். அதற்கு இங்கிலாந்து உள்துறை அமைச்சர் பிரீதி படேல் ஒப்புதல் அளித்தார்.

தொடர்ந்து, இந்த உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதி கோரி லண்டன் உயர்நீதிமன்றத்தில் நிரவ் மோடி தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.  அம்மனு, நீதிபதி மார்ட்டின் சாம்பர்லைன் முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, நிரவ் மோடி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் எட்வர்டு பிட்ஜெரால்டு கூறுகையில், ‘நிரவ் மோடி மனநலம் பாதிக்கப்பட்டு உள்ளார். அவர் தற்கொலை செய்து கொள்ள வாய்ப்பு இருப்பதாக மனநல நிபுணர் சான்றிதழ் கொடுத்துள்ளார். அவரை மும்பை ஆர்தர் ரோடு சிறையில் அடைக்க திட்டமிடப்பட்டுள்ளது. அங்கு, கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. அதனால், அவரை நாடு கடத்தக்கூடாது’ என்றார்.

Related Stories: