சின்னாளபட்டியில் நிழற்குடை இல்லாததால் பயணிகள் அவதி

சின்னாளபட்டி : சின்னாளபட்டிக்கு  வரும் அனைத்து பஸ்களும் சின்னாளபட்டி பிரிவு, பூஞ்சோலை பஸ்நிறுத்தத்தில்  நின்றுவிட்டு பஸ்நிலையம் செல்வது வழக்கம். பயணிகள் நலன் கருதி, கடந்த  2010ல் பூஞ்சோலை பஸ்நிறுத்தத்தில் பேரூராட்சி சார்பில் நிழற்குடை  அமைக்கப்பட்டது. கடந்த 2014ல் விஷமிகள் சிலர் தங்களது சுயநலனுக்காக  பஸ்நிறுத்தத்தில் இருந்த நிழற்குடையை அகற்றி விட்டனர். இதுகுறித்து எம்எல்ஏ  ஐ.பெரியசாமியிடம் புகார் அளிக்கப்பட்டது. இதன்பேரில் தனது தொகுதி  மேம்பாட்டு நிதி மூலம் மீண்டும் நிழற்குடை அமைக்கநடவடிக்கை எடுத்தார்.

ஆனால்  இதற்கு ஆளுங்கட்சியாக இருந்த அதிமுகவினர் முட்டுக்கட்டை போட்டனர். இதற்கு  பேரூராட்சி அதிகாரிகளும் உடந்தையாக இருந்தனர். இந்நிலையில் பூஞ்சோலை  பஸ்நிறுத்தத்தில் நிழற்குடை அமைத்து தர வேண்டும் என்று அமைச்சர்  ஐ.பெரியசாமிக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதுகுறித்து பேரூர் கழக  முன்னாள் திமுக செயலாளர் அறிவழகன் கூறுகையில், ‘பொதுமக்கள் நலனில்  அக்கறையின்றி, தனியார் சிலருக்காக நிழற்குடையை அகற்றியுள்ளனர். பூஞ்சோலை  பஸ்நிறுத்தத்தில் விரைவில் நிழற்குடை அமைக்க அமைச்சர் ஐ.பெரியசாமி  நடவடிக்கை எடுப்பார்’ என்றார்.

Related Stories: