ஆம்பூரில் சாலைகளில் சுற்றித்திரியும் கால்நடைகளால் விபத்து அபாயம்-நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் எதிர்பார்ப்பு

ஆம்பூர் : ஆம்பூரில் சாலைகளில் சுற்றித்திரியும் கால்நடைகளால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன் விபத்து ஏற்படும் அபாயமும் உள்ளது. ஆம்பூரில் தேசிய நெடுஞ்சாலை, பேரணாம்பட்டு செல்லும் பைபாஸ் சாலை, நேதாஜி ரோடு, உமர் ரோடு ஆகிய சாலைகள் போக்குவரத்து அதிகம் உள்ள சாலைகள். இந்த சாலைகளில் காலை மற்றும் மாலை போக்குவரத்து அதிகமுள்ள நேரங்களில் பசுமாடுகள், ஆடுகள்  ஆகியவை சுற்றி திரிகின்றன.

அவ்வாறு கால்நடைகள் சுற்றித்திரிவதால் பஸ், லாரி, கார்கள் மட்டுமன்றி இரு சக்கர வாகனத்தில் செல்வோரும் விபத்தில் சிக்கி சாலையில் விழுகின்றனர்.   சாலைகளில் சிலர் இந்த கால்நடைகளை மேய்ச்சலுக்கு விடுவதால் சாலைகளில் பொதுமக்கள் நடந்து செல்ல அச்சப்படுகின்றனர். மேலும், ஒரு சில இடங்களில் சாலையின் நடுவே இந்த கால்நடைகள் அமர்ந்து விடுவதால் போக்குவரத்து தடை ஏற்படுவதுடன் நெரிசல் ஏற்பட காரணமாக உள்ளன. இதனால், கவனிக்காமல் வரும் வாகன ஓட்டிகள் சாலையில் விழுவதுடன் மாடுகள் மீது மோதுவதால் அவற்றுக்கும் காயம் ஏற்படுவது வாடிக்கையாக உள்ளது. எனவே, இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஆம்பூரை சேர்ந்த பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Related Stories: