விளையாட்டு பிரபல டென்னிஸ் வீராங்கனை எலினா ஸ்விட்டோலினா திருமணம் Jul 18, 2021 எலெனா ஸ்விடோலினா ஜெனீவா: உக்ரைனை சேர்ந்த பிரபல டென்னிஸ் வீராங்கனை எலினா ஸ்விடோலினா. 26 வயதான இவர், சர்வதேச டென்னிஸ் தரவரிசையில் 6வது இடத்தில் உள்ளார். இவர் 2018ம் ஆண்டு உலக டூர் பைனலில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். இவர் பிரான்சை சேர்ந்த டென்னிஸ் வீரர் கெயில் மோன்ஃபில்ஸ்(34) என்பவரை காதலித்து வந்தார். டென்னிஸ் களத்தில் காதல் ஜோடியாக வலம் வந்த இவர்கள் கடந்த ஏப்ரல் மாதம் மோதிரம் மாற்றி நிச்சயம் செய்துகொண்டனர். இந்நிலையில் நேற்று முன்தினம் இவர்கள் திருமணம் செய்துகொண்டனர். சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் இவர்கள் திருமணம் எளிமையாக நடந்தது. இது தொடர்பாக படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள எலினா, என் வாழ்க்கையில் சிறந்தநாள் என குறிப்பிட்டுள்ளார். இவர்களுக்கு முன்னணி வீராங்கனைகளாக சிமோனா ஹாலெப், கரோலின் கார்சியா, வோஸ்னியாகி உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். திருமணம் முடிந்த கையோடு இவர்கள் ஒலிம்பிக்கில் பங்கேற்கின்றனர். எலினா உக்ரைனுக்காகவும், மோன்பில்ஸ் பிரான்சிற்காகவும் ஒற்றையர் மற்றும் இரட்டையர் பிரிவில் ஆட உள்ளனர். வரும் 25ம் தேதி முதல் ஒலிம்பிக்கில் டென்னிஸ் போட்டிகள் நடைபெற உள்ளது. இதற்காக ஆன்லைனில் ஆர்டர் செய்து பட்டன் கத்தி, டார்ச்லைட் ஆகியவற்றை வாங்கி உள்ளனர் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனிடையே வேலவன் கொலை வழக்கில் சிக்கியதால், அவரை கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் அறிவித்துள்ளனர்.
27-வது தேசிய பெடரேஷன் கோப்பை சீனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம், வெள்ளி பதக்கங்களை வென்ற தமிழக வீராங்கனைகள்
8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பைனலுக்கு முன்னேறியது கொல்கத்தா: ஸ்டார்க் அபார பந்துவீச்சு, ஷ்ரேயாஸ், வெங்கடேஷ் அரை சதம்