உச்சத்தில் மேகதாது அணை விவகாரம்: பிரதமர் மோடியை சந்தித்தார் கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா !

டெல்லி: தமிழ்நாடு மற்றும் கர்நாடக மாநிலம் இடையே மேகதாது அணை விவகாரம் உச்சத்தில் இருக்கும் நிலையில் பிரதமர் மோடியை கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா சந்தித்துள்ளார். இந்த அணையை மட்டும் கர்நாடக அரசு கட்டினால் டெல்டா பகுதியில் உள்ள லட்சக் கணக்கான மக்கள் மிகக் கடுமையாகப் பாதிக்கப்படுவார்கள். கர்நாடக அரசு காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதில் தீவிரவம் கட்டி வருகிறது. இதற்கு அம்மாநில அனைத்து அரசியல் கட்சிகளும் ஆதரவு அளித்துள்ளன.

இந்த நிலையில், பிரதமர் மோடியை கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா சார்ந்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பிரதமர் மோடியுடன் கர்நாடக முதல்வர் எடியூரப்பா மேகதாது அணை விவகாரம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் மேகதாது அணை கட்டுவதற்கு ஒன்றிய அரசு கர்நாடக மாநில அரசுக்கு அனுமதி வழங்க வேண்டுமென எடியூரப்பா பிரதமரிடம் வலியுறுத்தியதாகவும் தகவல் வெளிவந்துள்ளன

தமிழ்நாட்டின் மிக முக்கிய பிரச்சினைகளில் ஒன்றான மேகதாது அணை விவகாரம் தொடர்பாகக் கடந்த 12ஆம் தேதி தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது. அதில் உச்சநீதிமன்ற உத்தரவின்படி, காவிரி கீழ்படுகை மாநிலங்களிடம் அனுமதியின்றி மேகதாதுவில் எந்த கட்டுமானப் பணியையும் மேற்கொள்ளக் கூடாது என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேகதாது விவகாரம் பற்றி ஒன்றிய அமைச்சரிடம் தமிழக அனைத்து கட்சி குழு முறையிட்ட நிலையில் இந்த சந்திப்பு நடந்திருக்கின்றனர். இதனையடுத்து, பிரதமர் மோடியை கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா சார்ந்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: