அரியலூரிலிருந்து கிருஷ்ணகிரிக்கு 4,000 டன் நெல்மூட்டைகள் ரயிலில் அரவைக்கு அனுப்பி வைப்பு

அரியலூர் : அரியலூர் மாவட்டத்தில் கொள்முதல் செய்யப்பட்ட 4ஆயிரம் டன் நெல்மூட்டைகள் கிருஷ்ணகிரிக்கு தனி சரக்கு ரயில் மூலம் அனுப்பும் பணி நடைபெற்றது.

அரியலூர் மாவட்டத்தில் திருமானூர் மற்றும் தா.பழூர் ஆகிய‌ஒன்றியங்கள் டெல்டா பகுதியாக உள்ளது. இப்பகுதியிகளில் சாகுபடி செய்யப்பட்ட நெல் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் மூலம் 23 இடங்களில் கொள்முதல் நிலையம் அமைக்கப்பட்டு விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்டு வந்தது.

அவ்வாறு கொள்முதல் செய்யப்பட்ட நெல் மொத்த இருப்பு (குடோன்) மையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டு அங்கிருந்து அரவைக்கு அனுப்பிவைக்கப்பட்டு வந்தது. இதனிடையே அண்மையில் சில வாரங்களாக பெய்த மழையில் இருப்பு வைக்கப்பட்டிருந்த நெல் மூட்டைகள் பாதிக்கப்பட தொடங்கின.இதையடுத்து, கொள்முதல் நிலையங்கள் மற்றும் இருப்பு மையங்களிலிருந்த 4,000 டன் நெல் மூட்டைகள் அரியலூர் ரயில் நிலையத்திலிருந்து தனி சரக்கு ரயில் மூலம் கிருஷ்ணகிரி மற்றும் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அரிசி ஆலைகளுக்கு அரவைக்கு நேற்று அனுப்பி வைக்கப்படும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

தொடர்ந்து நான்கு நாட்கள் நடைபெறும் பணியில் நாள் ஒன்றுக்கு 45 லாரிகளில் மூலம் ஆயிரம் டன் நெல்மணிகள் 21 பெட்டிகள் அடங்கிய தனி சரக்கு ரயில் மூலம் அரியலூர் ரயில் நிலையத்திலிருந்து தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி அனுப்பப்படுகின்றது. தொடர்ந்து நான்கு நாட்கள் நடைபெறும் இந்த பணியின் மூலம் 4 ஆயிரம் டன் நெல்மணிகள் ஆலை அரவைக்கு அனுப்பப் டும் பணியில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர்.

Related Stories: