கொரோனா குணமாகி அசம் கான் டிஸ்சார்ஜ்

லக்னோ: உத்தரப்பிரதேசத்தில், சமாஜ்வாடி கட்சியின் மூத்த தலைவரும் எம்பியுமான அசம் கான்(72). அவரது மகன் அப்துல்லா கான்(30) பல்வேறு வழக்குகள் தொடர்பாக கடந்தஆண்டு பிப்ரவரியில் சிதாப்பூர் மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டனர்.  சிறையில் இருந்த அசம் கான், அவரது மகன் அப்துல்லா கானுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. கடந்த மே 9ம் தேதி இருவரும் மேதாந்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில் தொற்று குணமடைந்ததைஅடுத்து நேற்று இருவரும் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

Related Stories: