புதிதாக பதவியேற்ற பெண்அமைச்சர்களுக்கு நிர்மலா தேநீர் விருந்து

புதுடெல்லி: ஒன்றிய அமைச்சரவையை பிரதமர் மோடி கடந்த 7ம் தேதி விரிவாக்கம் செய்தார். இதில், 7 புதிய பெண் அமைச்சர்கள் உட்பட 43 பேர் பதவியேற்றனர். இதன்மூலம், இதுவரையில் இல்லாத வகையில் ஒன்றிய அமைச்சரவையில் முதல்முறையாக 9 பெண் அமைச்சர்கள் இடம் பெற்றுள்ளனர். இதனால், இவர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர். புதிய பெண் அமைச்சர்கள் பதவியேற்ற தினமே, முதலில் இருந்தே அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனும், ஜவுளித்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானியும் அவர்களுடன் குழு படத்தை எடுத்து வெளியிட்டனர். இந்நிலையில், புதியதாக பதவியேற்ற பெண்  அமைச்சர்களான  தர்ஷனா விக்ரம் ஜர்தோஷ், பிரதிமா பவுமிக், ஷோபா கரந்த்லேஜ், பாரதி பவார், மீனாட்சி லேகி, அனுபிரியா படேல், அன்ன பூர்ணதேவி ஆகியோருக்கு நிர்மலா சீதாராமன் நேற்று தனது வீட்டில் தேநீர் விருந்து அளித்தார்.

Related Stories: