இங்கிலாந்துக்கு 149 ரன் இலக்கு

ஹோவ்: இந்திய மகளிர் கிரிக்கெட் அணியுடனான 2வது டி20 போட்டியில், இங்கிலாந்து அணிக்கு 149 ரன் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஹோவ் கவுன்டி மைதானத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீசியது. ஸ்மிரிதி மந்தனா, ஷபாலி வர்மா இருவரும் இந்திய இன்னிங்சை தொடங்கினர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 8.4 ஓவரில் 70 ரன் சேர்த்து வலுவான அடித்தளம் அமைத்தது. மந்தனா 20 ரன் எடுத்து (16 பந்து, 1 பவுண்டரி, 1 சிக்சர்) பிரெயா டேவீஸ் பந்துவீச்சில் வில்லியர்ஸ் வசம் பிடிபட்டார்.

அரை சதத்தை நெருங்கிய ஷபாலி 48 ரன் எடுத்து (38 பந்து, 8 பவுண்டரி, 1 சிக்சர்) வில்லியர்ஸ் பந்துவீச்சில் ஸ்கிவரிடம் கேட்ச் கொடுத்து பெவிலியன் திரும்பினார். கேப்டன் ஹர்மான்பிரீத் கவுர் 31 ரன் (25 பந்து, 2 பவுண்டரி, 2 சிக்சர்), ரிச்சா கோஷ் 8 ரன் எடுத்து விக்கெட்டை இழந்தனர். இந்தியா 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 148 ரன் குவித்தது. தீப்தி ஷர்மா 24 ரன், ஸ்நேஹ் ராணா 8 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இதைத் தொடர்ந்து, 20 ஓவரில் 149 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து களமிறங்கியது.

Related Stories: