ஒன்றிய அமைச்சகம் தகவல் மதுரை மல்லி, அல்லிகள் ரூ.66 கோடிக்கு ஏற்றுமதி

புதுடெல்லி: ஒன்றிய வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: அமெரிக்காவில் வாழும் இந்தியர்கள் தங்களுடைய வீடுகள், கோயில்களில் பூக்களை வைத்து வழிபட இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படுகிறது. குறிப்பாக, புவிசார் குறியீடு பெற்ற மதுரை மல்லி, அல்லி, சாமந்தி, பட்டன் ரோசா உள்ளிட்ட பூக்கள்  அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தை சேர்ந்த வென்கார்ட் நிறுவனம், திண்டுக்கல், நிலக்கோட்டை மற்றும் சத்யமங்கலத்தில் இருந்து பூக்களை சேகரித்து ஏற்றுமதி செய்து உள்ளதாகவும், நீண்ட நாள் பயணத்தில் பூக்களின் தன்மையை பதப்படுத்த தேவையான உதவிகளை தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழகத்தின் மலர் வளர்ப்புத்துறை செய்துள்ளது.

மேலும், இந்தியாவில் 2020-21ம் ஆண்டில் மல்லிகை உள்ளிட்ட பாரம்பரியமிக்க பூக்கள் அமெரிக்க, சிங்கப்பூர் மற்றும் ஐக்கிய அரபு எமிரகம் உள்ளிட்ட நாடுகளுக்கு ரூ.66.28 கோடி அளவிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இதில், தமிழகத்தில் இருந்து சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட விமான நிலையங்கள் வழியாக ரூ.11.24 கோடி அளவுக்கு மலர் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: