43 புதிய அமைச்சர்கள் பட்டியல்: மக்களவை 27; மாநிலங்களவை 8

விரிவாக்கம் செய்யப்பட்ட அமைச்சரவையில் 36 பேர் புதிதாக பதவியேற்று உள்ளனர். இவர்களில் 27 பேர் மக்களவை எம்பி.க்கள். 8 பேர் மாநிலங்களவை எம்பி.க்கள். மாநிலங்களவையில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள்:

1.  நாராயண் ரானே

2. ஜோதிராதித்யா சிந்தியா

3.  ராமச்சந்திர பிரசாத் சிங்

4. அஸ்வினி வைஷ்ணவ்

5. பூபேந்தர் யாதவ்

6. ராஜீவ் சந்திரசேகர்

7. பி.எல்.வர்மா

8. பக்வத் கிஷண்ராவ் கராத்

* இந்த 8 பேரில் முதல் 5 பேர், கேபினட் அமைச்சர்களாக பதவியேற்று உள்ளனர்.

புதுவையில் இருந்து எம்பி.யாகிறார்

புதுச்சேரியில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட அதிமுக எம்பி கோகுலகிருஷ்ணனின் பதவிக்காலம் வரும் அக்டோபரில் முடிவடைகிறது. இதனால், புதுச்சேரியில் இருந்து எல்.முருகனை எம்பியாக தேர்வு செய்ய பாஜக திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

எம்பி.யாக இல்லாமல் பதவியேற்ற முருகன்

தமிழக பாஜ தலைவர் எல்.முருகன் மட்டுமே, எந்த அவையிலும் எம்பி.யாக இல்லாமல் அமைச்சராக பதவியேற்று உள்ளார். எல். முருகன் (47), நாமக்கல் மாவட்டம், பரமத்தியை அடுத்த கோனூரில் 1977ம் ஆண்டு மே 29ம் தேதி பிறந்தார். 15 ஆண்டுக்கும் மேலாக சென்னை ஐகோர்ட்டில் வக்கீலாக பணியாற்றியுள்ளார். கடந்த 2020 மார்ச் மாதம் முருகன் தமிழக பாஜக தலைவராக நியமிக்கப்பட்டார்.  நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில், தாராபுரம் தொகுதியில் போட்டியிட்டு தோற்றார். 2016 சட்டமன்ற தேர்தலில் ராசிபுரம் தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். பாஜ மாநில தலைவராக நியமிக்கப்படுவதற்கு முன், 2 ஆண்டுகள் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய துணைத்தலைவராக இருந்தார்.

மக்களவையில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள்:

1. சர்பானந்தா சோனோவால்

2. வீரேந்திர குமார்

3. பசுபதி குமார் பாரஸ்

4. பங்கஜ் சவுத்ரி

5. அனுபிரியா சிங் படேல்

6. சத்ய பால் சிங் பாகல்

7. ஷோபா கரந்தலேஜ்

8. பானு பிரதாப் சிங் வர்மா

9. தர்ஷணா விக்ரம் ஜர்தோஷ்

10. மீனாட்சி லேகி

11. அன்னபூர்ணா தேவி

12. ஏ.நாராயணஸ்வாமி

13. கவுசல் கிஷோர்

14. அஜய் பட்

15. அஜய் குமார்

16. சவுகான் தேவ்சின்

17. பக்வந்த் கவுபா

18. கபில் மோரிஸ்வர் பாட்டீல்

19. சுஷ்ரி பிரதிமா பவுமிக்

20. சுபாஷ் சர்கார்

21. ராஜ்குமார் ரஞ்சன் சிங்

22. பாரதி பிரவின் பவார்

23. பிஷ்வேஸ்வர் துடு

24. சாந்தனு தாக்கூர்

25. முன்ஜபாரா மகேந்திரபாய்

26. ஜான் பர்லா

27. நிஷித் பிரமானிக்

கேபினட் அமைச்சர்கள்

1. நாராயண் ரானே

2. சர்பானந்தா சோனோவால்

3. வீரேந்திர குமார்

4. ஜோதிராதித்யா சிந்தியா

5. ராமச்சந்திர பிரசாத் சிங்

6. அஸ்வினி வைஷ்ணவ்

7. பசுபதி குமார் பாரஸ்

8. கிரண் ரிஜிஜூ

9. ராஜ்குமார் சிங்

10. ஹர்தீப் சிங் புரி

11. மன்சுக் மண்டாவியா

12. பூபேந்தர் யாதவ்

13. புருஷோத்தம் ரூபலா

14. கிஷண் ரெட்டி

15. அனுராக் சிங் தாகூர்

இணை அமைச்சர்கள்

1. பங்கஜ் சவுத்ரி

2. அனுபிரியா சிங் படேல்

3. சத்ய பால் சிங் பாகேல்

4. ராஜீவ் சந்திரசேகர்

5. ஷோபா கரண்லாஜி

6. பானு பிரதாப் சிங் வர்மா

7. தர்ஷணா விக்ரம் ஜர்தோஷ்

8. மீனாட்சி லேகி

9. அன்னபூர்ணா தேவி

10. ஏ.நாராயணஸ்வாமி

11. கவுசல் கிஷோர்

12. அஜய் பட்

13. பி.எல்.வர்மா

14. அஜய் குமார்

15. சவுகான் தேவ்சின்

16. பக்வந்த் கவுபா

17. கபில் மோரிஸ்வர் பாட்டீல்

18. சுஷ்ரி பிரதிமா பவுமிக்

19. சுபாஷ் சர்கார்

20. பக்வத் கிஷண்ராவ் கராத்

21. ராஜ்குமார் ரஞ்சன் சிங்

22. பாரதி பிரவின் பவார்

23. பிஷ்வேஸ்வர் துடு

24. சாந்தனு தாக்கூர்

25. முன்ஜபாரா மகேந்திரபாய்

26. ஜான் பர்லா

27. எல். முருகன்

28. நிஷித் பிரமானிக்

பரவலாக்கப்பட்ட பிரதிநிதித்துவம்

* புதிதாக அமைச்சரவையில் சேர்க்கப்பட்ட 43 பேரில் 13 வக்கீல்கள், 6 டாக்டர்கள், 5 பொறியாளர்கள், 7 ஐஏஎஸ்.கள், 7 பிஎச்டி பட்டம் பெற்றவர்கள், 3 எம்பிஏ பட்டதாரிகள் இடம் பெற்றுள்ளனர்.

* புதிய அமைச்சரவையில் 7 பெண் அமைச்சர்கள் இடம் பெற்றுள்ளனர். இதில் 2 பேர் கேபினட் அமைச்சர்கள்.

* 3 கேபினட் அமைச்சர் சிறுபான்மை சமூகத்தை சேர்ந்தவர்கள்.

* புதிய அமைச்சரவையில் 4 பேர் முன்னாள் முதல்வர்கள், 18 பேர் மாநில முன்னாள் அமைச்சர்கள், 39 பேர் முன்னாள் எம்எல்ஏக்கள் ஆவர்.

* புதிய அமைச்சரவையில் தாழ்த்தப்பட்ட பிரிவைச் சேர்ந்த 12 பேர் அமைச்சர்களாகி உள்ளனர். இதில் 2 பேருக்கு கேபினட் அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது.

* பீகார், மபி, மகாராஷ்டிரா, மேற்கு வங்கம், கர்நாடகா, ராஜஸ்தான், தமிழ்நாடு ஆகிய 8 மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் புதிய அமைச்சர்களாகி உள்ளனர்.

* 8 மாநிலங்களில் இருந்து பழங்குடியின சமூகத்தை சேர்ந்த 8 பேர் அமைச்சர்களாகி உள்ளனர்.

* சிறுபான்மை சமூகத்தில் இருந்து 5 பேர் அமைச்சராக்கப்பட்டு உள்ளனர்.

* 29 அமைச்சர்கள் பிராமணர், கயாஸ்த், மராத்தா, லிங்காயத் உள்ளிட்ட பிற சமூகங்களை சேர்ந்தவர்கள்

* 6 கேபினட் அமைச்சர்கள் உட்பட 14 அமைச்சர்கள் 50 வயதுக்கு உட்பட்டவர்கள்.

* 27 அமைச்சர்கள் இதர பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர்கள், அவர்களில் 5 பேருக்கு கேபினட் அந்தஸ்து தரப்பட்டுள்ளது.

Related Stories: