திட்ட அறிக்கை கொடுத்து இருப்பதனால் மட்டும் கர்நாடகா மேகதாதுவில் அணை கட்ட முடியாது: மத்திய அமைச்சர் உறுதி

டெல்லி: மத்திய அரசு திட்ட அறிக்கை கொடுத்து இருப்பதனால் மட்டும் கர்நாடகா மேகதாதுவில் அணை கட்ட முடியாது என்றும் அணை கட்டும் விவகாரத்தில் தமிழக அரசின் ஒத்துழைப்பு இல்லாமல் கர்நாடகா எந்த முடிவும் எடுக்க முடியாது, அதனால் தமிழகம் அச்சப்பட வேண்டாம் என்று மத்திய ஜலசக்தி துறை அமைச்சர், தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனிடம் உறுதியளித்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் கருத்தை கேட்காமல் மத்திய அரசு அனுமதி வழங்காது என்று ஒன்றிய அமைச்சர் உறுதி கூறினார் என்று அமைச்சர் துரைமுருகன் பேட்டியளித்துள்ளார்.

Related Stories: