சோனம் வாங்சுக்கை தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்த உத்தரவை உடனடியாக ரத்து செய்வதாக ஒன்றிய அரசு அறிவிப்பு

 

டெல்லி: லடாக் சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக்கை தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்த உத்தரவை உடனடியாக ரத்து செய்வதாக ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. கடந்த 6 மாதங்களாக சிறையில் உள்ள சோனம் வாங்சுக் விரைவில் விடுவிக்கப்பட உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் “ரத்தின மகுடம்” என்று வர்ணிக்கப்படும் லடாக் இயற்கை எழில் பொருந்தியது. அழகான கோவில்கள், மடாலயங்கள், மசூதிகள், மலைகள், சுற்றுலா தலங்கள் என்று திரும்பும் இடம் எல்லாம் எழில் கொஞ்சும் அழகு கொண்டது. ஆனால் அதே லடாக் தற்போது வன்முறையால் சீர்குலைந்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. சாலைகளில் வன்முறைகள். கலவரங்கள் என்று கொதிப்பான சூழல் அங்கே நிலவி வருகிறது. இந்த கலவரங்களுக்கு பல காரணங்கள் சொல்லப்படுகின்றன.. அதில் முதன்மை காரணம் சோனம் வாங்சுக்!

காலநிலை மாற்றப் போராளியாக சர்வதேச அளவில் கொண்டாடப்பட்ட நபர் சோனம் வாங்சுக். இதே சோனம் வாங்சுக் தற்போது அங்கே கலவரம் நடப்பதற்கு காரணமாக அமைந்துவிட்டார். சோனம் வாங்சுக் தற்போது கைது செய்யப்பட்டு, அமைதியின்மையை தூண்டியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளார். லடாக்கின் லே நகரில் செப்டம்பர் 24 அன்று நடந்த வன்முறையில் நான்கு பேர் உயிரிழந்தனர். இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, சோனம் வாங்சுக் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

லடாக் லே எரிந்த நாள் செப்டம்பர் 24 அன்று லே முழுக்க பெரிய அளவில் வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டது. காஷ்மீருக்குச் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட போது, லடாக் சட்டசபை இல்லாத ஒன்றியம் பிரதேசமாகச் செயல்படும் என அறிவிக்கப்பட்டது. இதற்கிடையே லடாக்கிற்கு மாநில அந்தஸ்து கோரியும் லடாக் பகுதியை இந்திய அரசியலமைப்பின் ஆறாவது அட்டவணையில் சேர்க்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும் அங்கே போராட்டங்கள் நடந்து வருகின்றன.

முதலில் லடாக்கில் முழு அடைப்பு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால் இந்த முழு அடைப்பு கொஞ்சம் கொஞ்சமாக.. கைமீறி போய் அப்படியே போராட்டமாக மாறி கலவரத்தில் முடிந்தது. போராட்டத்திற்கு வந்த கூட்டத்தினர் பலர் மத்திய அரசு மற்றும் பாரதிய ஜனதா கட்சி அலுவலகங்களைத் தாக்கி, வாகனங்களுக்குத் தீ வைத்து கலவரத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தை கட்டுப்படுத்த வந்த போலீசார் உடனுடன் சண்டைக்கு சென்றனர்.

இந்தக் கலவரத்தில் நான்கு பேர் உயிரிழந்தனர், பத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். ஒன்றிய அரசின் சொத்துக்கள் பல சேதப்படுத்தப்பட்டது. கலவர கும்பல் காவல் நிலையங்கள் மற்றும் பொதுச் சொத்துக்களை குறிவைத்ததால், நிர்வாகம் ஊரடங்கை விதித்தது. ஒன்றிய அரசு அதிகாரிகள், இது ஒரு தன்னிச்சையான போராட்டம் அல்ல, ஆனால் இது திட்டமிட்டு அரங்கேற்றப்பட்ட கலவரம். மக்கள் தன்னெழுச்சியாக போராடவில்லை.

திட்டமிட்டு இந்த கலவரத்தை நடத்தி உள்ளனர் என்று குற்றம்சாட்டுகின்றனர். இந்த வன்முறைக்குச் சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் தான் காரணம் என்று மத்திய அரசு குற்றஞ்சாட்டியது.. சோனம் வாங்சுக் வன்முறை தூண்டும் வகையில் வகையில் பேசியதாகவும் அதுவே வன்முறையைத் தூண்டிவிட்டதாகவும் ஒன்றிய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

Related Stories: