கோபா அமெரிக்கா கால்பந்து கால்இறுதி; ஈக்வடாரை பந்தாடி அரையிறுதியில் அர்ஜென்டினா: உருகுவேவை வெளியேற்றியது கொலம்பியா

கோயானியா: கோபா அமெரிக்கா கால்பந்து தொடரில் பிரேசிலில் நடந்து வருகிறது. இதில் கோயானியா நகரில் இன்று அதிகாலை நடந்த 3வது கால் இறுதி போட்டியில் உருகுவே -கொலம்பியா மோதின. விறுவிறுப்புடன் நடந்த இந்த போட்டியில் கடைசி வரை இரு அணிகளும் கோல் அடிக்க வில்லை. இதையடுத்து வெற்றியை பெனால்டி ஷூட் அவுட்முறை கடைபிடிக்கப்பட்டது. இதில், கொலம்பியா 4 கோல்களும் உருகுவே 2 கோல்களும் அடித்தன. இதனால் கொலம்பியா அரையிறுதிக்கு தகுதி பெற்றது. தொடர்ந்து இன்று அதிகாலை 6.30 மணிக்கு நடந்த 4வது கால் இறுதி போட்டியில் அர்ஜென்டினா- ஈக்வடார் மோதின.

வலுவான அர்ஜென்டினா தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தியது. 40வது நிமிடத்தில் அந்த அணியின் ரோட்ரிகோ டி பால் கோல் அடித்தார். இதனால் முதல் பாதியில் 1-0 என அர்ஜென்டினா முன்னிலை பெற்றது. 2வது பாதியில் ஆட்டத்தின் 84வது நிமிடத்தில், அர்ஜென்டினாவின் லாட்டாரோ மார்டினெஸ் கோல் அடித்தார். கேப்டன் மெஸ்சி தனது பங்கிற்கு 93வது நிமிடத்தில் பிரீ கிக்கில் கோல் அடித்தார். இறுதி வரை ஈக்வடார் வீரர்கள் போராடியும் கோல் அடிக்க முடியவில்லை. இதனால் 3-0 எனற கோல் கணக்கில் வெற்றி பெற்ற அர்ஜென்டினா அரையிறுதிக்குள் நுழைந்தது.

வரும் 6ம் தேதி அதிகாலை 4.30 மணிக்கு நடைபெறும் முதல் அரையிறுதியில் பிரேசில்-பெரு, 7ம் தேதி அதிகாலை 6.30மணிக்கு 2வது அரையிறுதியில், அர்ஜெனடினா- கொலம்பியா அணிகள் மோதுகின்றன.

Related Stories: