சர்ச்சைக்குரிய பதிவுகள் நீக்கம் வாட்ஸ்அப், பேஸ்புக் நடவடிக்கை அறிக்கை: புதிய சட்டத்துக்கு பணிந்து அறிவிப்பு

புதுடெல்லி: ஒன்றிய அரசின் புதிய தகவல் தொழில்நுட்ப சட்டத்தின்படி, சர்ச்சைக்குரிய  பதிவுகளை நீக்்கியது பற்றிய நடவடிக்கை அறிக்கையை பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் வெளியிட்டுள்ளன. இந்தியாவில் பேஸ்புக், வாட்ஸ்அப், டிவிட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற பிரபல சமூக வலைதளங்களில் வெளியிடப்படும் சர்ச்சை பதிவுகள், புகைப்படங்களை நீக்கவும், மக்கள் அளிக்கும் புகார்களின் மீது சமூக வலைதளங்கள் நடவடிக்கை எடுக்கும் வகையில். ஒன்றிய அரசு புதிய தகவல் தொழில்நுட்ப சட்டத்தை கொண்டு வந்துள்ளது. டிவிட்டரை தவிர மற்ற சமூக வலைதளங்கள் இவற்றை ஏற்றுக் கொண்டுள்ளன. இதன்படி எடுக்கப்பட்ட நடவடிக்கை பற்றிய அறிக்கையை மாதம்தோறும் வெளியிட வேண்டும். அதன் அடிப்படடையில், இந்த சமூகவலைதளங்கள் தங்களின் முதல் நடவடிக்கை அறிக்கையை வெளியிட்டுள்ளன.

* கடந்த மே 15ம் தேதி முதல் ஜூன் 15 வரையிலான காலக்கட்டத்தில், 10 விதிமுறை மீறல் பிரிவுகளின் கீழ் மொத்தம் 3 கோடி பதிவுகளின் மீது நடவடிக்கை எடுத்து இருப்பதாக பேஸ்புக் கூறியுள்ளது.  

* இதே காலக்கட்டத்தில், 2 கோடி லட்சம் பதிவுகளின் மீது இன்ஸ்டாகிராம் நடவடிக்கை எடுத்துள்ளது.

* மக்கள் அளித்த 27 ஆயிரத்து 762 புகார்களின் மீது நடவடிக்கை எடுத்து இருப்பதாகவும், 59 ஆயிரத்து 350 சர்ச்சைக்குரிய பதிவுகளை நீக்கி இருப்பதாகவும் கூகுள் கூறியுள்ளது.

* மக்கள் கொடுத்த 5,502 புகார்களின் மீது நடவடிக்கை எடுத்திருப்பதாகவும், சர்ச்சைக்குரிய 54 ஆயிரத்து 235 பதிவுகளை நீக்கி இருப்பதாகவும் ‘கூ’ தெரிவித்துள்ளது.

மகிழ்ச்சி.. மிக்க மகிழ்ச்சி

ஒன்றிய தகவல் தொழில்நுட்பத் துறை ரவிசங்கர் பிரசாத் நேற்று வெளியிட்ட டிவிட்டர் பதிவில், ‘இந்தியாவின் தகவல் தொழில்நுட்ப சட்டத்தை சமூக வலைதள நிர்வாகங்கள் பின்பற்றி இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இதன்மூலம், சமூக வலைதளங்களில் வெளிப்படைத்தன்மை அதிகமாகும்,’ என கூறியுள்ளார்.

Related Stories: