கொந்தகையில் ஒரே குழியில் 9 மனித எலும்புக்கூடுகள் கண்டெடுப்பு

திருப்புவனம்: கீழடி அருகே கொந்தகையில் மனித எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே கீழடி, கொந்தகை, மணலூர், அகரம் உள்ளிட்ட இடங்களில் 7ம் கட்ட அகழாய்வு நடந்து வருகிறது. கடந்த 6ம் கட்ட அகழாய்வில் 25 மனித எலும்புக்கூடுகள் கண்டறியப்பட்டன. தற்போது 7ம் கட்ட அகழாய்வில் 4 குழிகளில் 13 முதுமக்கள் தாழிகள், 9 சமதளத்தில் புதைக்கப்பட்ட எலும்புக்கூடுகள் கண்டறியப்பட்டன. முதுமக்கள் தாழிகளில் இரண்டு மட்டும் திறக்கப்பட்டு எலும்புகள், மண்டை ஓடுகள், புழங்கு பொருட்கள் உள்ளிட்டவைகள் ஆய்விற்காக அனுப்பப்பட்டுள்ளன.

நேற்று கொந்தகையில் 20 அடிக்கு 20 அளவிலான ஒரு குழியில் 9 மனித எலும்புக்கூடுகள் கண்டறியப்பட்டன. இதில் 6 மனித எலும்புக்கூடுகள் மேல் மண் அகற்றப்பட்டு தெளிவாக தெரிகிறது. எலும்புக்கூடுகளை ஆய்வு செய்யும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. முழுமையாக எலும்புக்கூடுகள் வெளியே எடுக்கப்பட்டவுடன், டிஎன்ஏ பரிசோதனைக்காக அனுப்பப்படும். எலும்புக்கூடுகளை ஒவ்வொன்றாக முழுமையாக வெளியே எடுத்த பின் மதுரை காமராசர் பல்கலைக்கழக மரபணு பிரிவு ஆய்வு செய்யும் என தெரிகிறது. 6 மற்றும் 7ம் கட்ட அகழாய்வில் கிடைத்த எலும்புக்கூடுகள், எலும்புகள், மண்டை ஓடுகள் உள்ளிட்டவைகள் தனித்தனியே ஆய்வு செய்யப்பட உள்ளன.

Related Stories: