துப்பாக்கிச்சூடு நடத்தி 3 ரவுடிகள் கைது: ராஜஸ்தான் போலீஸ் அதிரடி

உதய்பூர்: ராஜஸ்தான் மாநிலம் உதய்பூர் மாவட்டத்தின் பல்வேறு காவல் நிலையங்களில் ரவுடி பட்டியலில் உள்ள இம்ரான் குஞ்ச்தா என்பவர், கடந்த சில வாரங்களுக்கு முன் சிறையில் இருந்து ஜாமினில் வெளியே வந்தார். அடுத்த சில நாட்களில் மிரட்டி பணம் பறித்தல் போன்ற செயல்களில் ஈடுபட்டார். அதையடுத்து கடந்த சில நாட்களுக்கு முன், அம்பமாதா காவல் நிலையத்தில், மிரட்டி பணம் பறித்தல் தொடர்பான வழக்கு பதிவு செய்யப்பட்டது. தனிப்படை போலீசார் அவரை தேடிவந்த நிலையில், ராஜ்சமண்டியில் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது. அதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், இம்ரான் குஞ்ச்தா மற்றும் அவரது இரண்டு கூட்டாளிகளான ராஜு மேவதி மற்றும் நசீர் ஆகியோரை சுற்றிவளைத்தனர்.

குற்றவாளிகள் கையில் துப்பாக்கி வைத்திருந்ததால் போலீசார் மீது 3 ரவுண்டு  துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதற்கு பதிலடி கொடுத்த போலீசார், மூவரையும் துப்பாக்கிச் சூடு நடத்தி கைது செய்தனர். இந்த சம்பவத்தில், ​​சில போலீசாருக்கு லேசான காயம் ஏற்பட்டது. அவர்களிடம் இருந்து சட்டவிரோத ஆயுதங்கள் மற்றும் 5 தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டன என்று போலீசார் கூறினர்.

Related Stories: