இந்தியர்கள் உட்பட 2 லட்சம் வாலிபர்களின் நாடு கடத்தலை தடுக்க அமெரிக்காவில் மசோதா

வாஷிங்டன்: அமெரிக்காவில் குடியுரிமை பெறாத பெற்றோரின் 2 லட்சம் வாலிபர்களை பாதுாக்கும் வகையில் சட்ட மசோதா அந்நாட்டு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அமெரிக்காவில் எச்1பி, எல்1, இ1 மற்றும் இ2 போன்ற பணி விசா மூலம் பலர் தங்கி வேலை பார்க்கின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் நீண்ட காலமாக கிரீன் கார்டு எனப்படும் நிரந்தர குடியுரிமைக்காக காத்திருக்கின்றனர். இவ்வாறு குடியுரிமை பெறாதவர்களின் குழந்தைகள் 21 வயது ஆனதும், அமெரிக்காவில் இருந்து தாமாக நாடு கடத்தப்படுவார்கள் என்ற குடியுரிமை சட்டம் அமலில் உள்ளது. அந்த வகையில் ஏராளமான இந்திய வாலிபர்கள் உட்பட 2 லட்சம் பேர் இதுபோன்ற நாடு கடத்தல் நடவடிக்கைக்கு ஆளாக உள்ளனர்.

இவர்களை பாதுகாக்கவும், நிரந்தர குடியுரிமை வழங்க வகை செய்யவும் அமெரிக்காவின் குழந்தைகள் சட்டம் என்ற மசோதாவை 4 எம்பிக்கள் பிரதிநிதிகள் அவையில் நேற்று தாக்கல் செய்தனர். இந்த மசோதாவின்படி, முறையான ஆவணங்களுடன் பணியாற்றுவோரின் குழந்தைகள் 10 ஆண்டுகள் அமெரிக்காவில் தங்கி, ஏதேனும் ஓர் கல்வி நிறுவனத்தில் பட்டம் பெற்றிருந்தால் நிரந்தர குடியுரிமை வழங்கப்படும். இந்த மசோதா பிரதிநிதிகள் மற்றும் செனட் அவையில் நிறைவேற்றப்பட்டால் சட்டமாக கொண்டு வரப்படும். இதன் மூலம், இந்திய வாலிபர்கள் உள்ளிட்ட 2 லட்சம் வெளிநாட்டு வாலிபர்கள் பயன் அடைவார்கள்.

Related Stories: