தேவையின்றி வெளியே வராதீங்க ஆப்கானில் இந்தியர்கள் கடத்தப்படும் அபாயம்: இந்திய தூதரகம் எச்சரிக்கை

புதுடெல்லி:  ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க, நேட்டோ படைகள் வாபஸ் பெறப்பட்டு வருவதால், தலிபான்கள் தீவிரவாதிகளின் அட்டகாசம் அதிகரித்துள்ளது. அரசுப் படைகளின் மீது தாக்குதல் நடத்தி, கடந்த 2 வாரங்களில் மட்டுமே 30க்கும் மேற்பட்ட மாவட்டங்களை கைப்பற்றி விட்டனர். இந்நிலையில், தலிபான் தீவிரவாதிகளால் இந்தியர்களுக்கு ஆபத்து ஏற்படும் நிலை உருவாகி இருக்கிறது. இது தொடர்பாக, காபூலில் செயல்படும் இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘தீவிரவாத குழுக்கள்  வணிக வளாகங்கள், பொதுமக்களை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகின்றன. இதற்கு இந்தியர்களும் விதி விலக்கல்ல. மேலும், இந்தியர்களுக்கு கடத்தல் அச்சுறுத்தலும் நிலவுகிறது. எனவே, இந்தியர்கள்அவசியம் இல்லாத பயணங்களையும், வெளியே செல்வதையும் தவிர்க்க வேண்டும். எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்,’ என கூறப்பட்டுள்ளது. ஆப்கானில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்தியர்கள் தங்கி பணிபுரிந்து வருகின்றனர்.

Related Stories: