செல்போன்களில் வரும் ‘ஓடிபி’ ஒரே நாளில் தானாக அழியும்: கூகுளில் புதிய வசதி

புதுடெல்லி: வங்கி பரிவர்த்தனை உள்ளிட்ட முக்கிய வர்த்தகம் சார்ந்த நடவடிக்கைகள், ஆவணங்கள் சரிபார்த்தல் போன்ற செயல்களின்போது, ரகசியத்தை காக்கும் பொருட்டும், பரிவர்த்தனை செய்பவர் சம்பந்தப்பட்ட உண்மையான நபர் தானா என்பதை உறுதி செய்வதற்காகவும் செல்போன்களில் ‘ஓடிபி’ எனப்படும் ‘ஒன் டைம் பாஸ்வேர்டு’ எண் அனுப்பப்படுகிறது. இது ரகசிய எண்ணாக இருப்பதால், இதை மற்றவர்களிடம் கூறக் கூடாது. சம்பந்தப்பட்ட பரிவர்த்தனை முடிந்ததும் பயனாளர்கள் அந்த ஓடிபியை அழித்து விட வேண்டும். இனிமேல், இந்த ஓடிபி எண்ணை பயனாளர்கள் இனி அழிக்கத் தேவையில்லை. 24 மணி நேரத்தில் அதுவே தானாக அழிந்து விடும் தொழில்நுட்பத்தை கூகுள் அறிமுகம் செய்கிறது. இந்தியாவில் அடுத்த சில வாரங்களில் இது அமலுக்கு வரும் என்று கூகுள் நிர்வாகிகள் நேற்று தெரிவித்தனர். இதுதொடர்பாக, கூகுள் வழங்கும் செட்டிங் வசதியை ஆக்டிவேட் செய்ய வேண்டியது அவசியம்.

* 59 ஆயிரம் பதிவுகள் நீக்கம்

மத்திய அரசின் புதிய தகவல் தொழில் நுட்ப சட்டத்தின்படி, கட்நத ஏப்ரல் மாதத்தில் பெறப்பட்ட புகார்களி்ன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை பற்றிய அறிக்கையை கூகுள் நேற்று வெளியிட்டது. அதில், ஏப்ரல் மாதத்தில் மொத்தம் 27 ஆயிரத்து 762 புகார்கள் பெறப்பட்டதாகவும், 59 ஆயிரத்து 350 சட்ட விரோத பதிவுகள் நீக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது.

Related Stories: