முக்கிய செய்தி தமிழகம் கண், வாய், காதுகளை மூடிக் கொண்டு இருக்கும் இந்தியாவின் மூன்று குரங்கு சின்னங்களாக ஒரு போதும் சினிமா இருக்காது: கமல்ஹாசன் ட்வீட் Jun 29, 2021 இந்தியா கமல்ஹாசன் டெல்லி: மத்திய அரசு. ஒளிப்பதிவு சட்ட வரைவு 2021-ஐ பொதுமக்கள் கருத்திற்காக வெளியிட்டு உள்ளது. இது பொதுமக்களின் பார்வைக்காக ஜூலை 2 வரை இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சட்டத் திருத்தம் படைப்பாளிகளின் கருத்து சுதந்திரத்திற்கு எதிரான அச்சுறுத்தலாக மாறிவிடும் என சினிமா துறையை சார்ந்த வல்லுநர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், இந்த வரைவு மசோதாவிற்கு எதிராக மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் தனது எதிர்ப்பை பதிவு செய்துள்ளார். கண், வாய், காதுகளை மூடிக் கொண்டு இருக்கும் இந்தியாவின் மூன்று குரங்கு சின்னங்களாக ஒரு போதும் சினிமா, ஊடகம் மற்றும் கல்வி இருக்காது. அதன் சுதந்திரத்தை நசுக்கப் பார்த்தால் அது மிகப்பெரிய பாதிப்பையே உண்டாக்கும். இந்த சட்டத்திருத்தை எதிர்த்து அனைவரும் குரல் கொடுக்க வேண்டும் என்று ட்வீட்டரில் பதிவிட்டுள்ளார்.
தமிழ்நாட்டுக்கு நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது என ஒன்றிய பாஜக அரசு வஞ்சிக்கிறது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்
ஓய்வு பெறும் ஆசிரியர்களுக்கு ஓய்வூதிய பலன்களை 30 நாட்களுக்குள் வழங்க நடவடிக்கை: அதிகாரிகளுக்கு பள்ளிக்கல்வி இயக்குநர் உத்தரவு
நாட்டில் உள்ள அனைத்து கிராமங்களிலும் லோக் அதாலத் பற்றிய விழிப்புணர்வு உள்ளது: உச்ச நீதிமன்ற நீதிபதி சஞ்சீவ் கண்ணா பெருமிதம்
மிக்ஜாம் புயல் பாதிப்பு; தமிழ்நாடு அரசு கேட்டது ரூ.38,000 கோடி; ஒன்றிய அரசு ஒதுக்கியதோ ரூ.285 கோடி.! தொடர்ந்து வஞ்சிக்கும் பாஜ அரசு
பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் அமேதி, ரேபரேலி தொகுதி வேட்பாளர்கள் யார்? காங்கிரஸ் மத்திய தேர்தல் குழு இன்று மாலை அறிவிக்கிறது
தினகரன்-சென்னை விஐடி இணைந்து நடத்தும் பிளஸ் 2 மாணவர்களுக்கான கல்வி கண்காட்சியை அமைச்சர் பொன்முடி தொடங்கி வைத்தார்: நூற்றுக்கும் மேற்பட்ட கல்லூரிகள் சார்பில் அரங்குகள் அமைப்பு
கோடை காலத்தில் தடையின்றி குடிநீர் விநியோகம் செய்வதற்காக ரூ.150 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு பேருந்துகளையும் 48 மணி நேரத்தில் ஆய்வு செய்து குறைகள் சரி செய்ய போக்குவரத்துத் துறை உத்தரவு
ரூ.63,000 கோடி சென்னை மெட்ரோ ரயில் 2ம் கட்ட திட்டத்திற்கு ரூ.1 கூட தராத ஒன்றிய அரசு.. மாநில நிதியில் செலவீனங்களை மேற்கொள்ளும் தமிழ்நாடு அரசு!!
திராவிட இனத்தின் உரிமைக்குரலை ஓங்கி ஒலித்த தீரர்!: சர்.பிட்டி தியாகராயரின் 173-வது பிறந்த நாளை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
தினகரன் நாளிதழும், விஐடியும் இணைந்து நடத்தும் கல்வி கண்காட்சியை சென்னை நந்தம்பாக்கத்தில் தொடங்கி வைத்தார் அமைச்சர் பொன்முடி!!
மீண்டும் வாக்குச் சீட்டு முறை கிடையாது எல்லா ஒப்புகை சீட்டுகளையும் எண்ண முடியாது: அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு