அரபு அமீரகத்தில் டி20 உலக கோப்பை

துபாய்: இந்தியாவில் நடத்த திட்டமிட்டிருந்த டி20 உலக கோப்பை தொடரை ஐக்கிய அரபு அமீரகம், ஓமனில் நடந்த ஐசிசி முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கொரோனா  காரணமாக  ஆஸ்திரேலியாவில்  2020ல் நடைபெற இருந்த டி20 உலக  கோப்பை தள்ளி வைக்கப்பட்டது. அதற்கு பதில் இந்த ஆண்டு இந்தியாவில் நடத்த ஏற்கனவே திட்டமிட்டிருந்த டி20 உலக கோப்பையை நடத்த ஐசிசி முடிவு செய்தது. கொரோனா அச்சுறுத்தல்  தொடர்வதால்  ஐபிஎல் டி20 தொடரும் இடை நிறுத்தப்பட்டு, எஞ்சியுள்ள ஆட்டங்களை செப்டம்பர், அக்டோபரில்  அமீரகத்தில் நடத்த பிசிசிஐ முடிவு செய்துள்ளது.

இந்நிலையில் இந்தியாவில் உலக கோப்பை நடத்துவது குறித்து இன்றைக்குள் தெரிவிக்கும்படி ஐசிசி அறிவுறுத்தி இருந்தது. கெடு இன்று முடிவடையும் நிலையில், வேறு நாடுகளில் நடத்த தங்களுக்கு தடையில்லை என்று பிசிசிஐ தரப்பில் கூறப்பட்டதாக தகவல் வெளியானது.  டி20 உலக கோப்பை  தொடர் ஐக்கிய அரபு அமீரகத்திலும்,  ஓமனிலும் நடைபெறும்,  போட்டி அக்.17ம் தேதி தொடங்கும், இறுதிப்போட்டி  நவ.14ம் தேதி நடைபெறும் என்று ஐசிசி வட்டாரங்களிலும் தகவல் கசிந்துள்ளது. ஆனால் ஐசிசி, பிசிசிஐ அமைப்புகள் அதை இதுவரை உறுதி செய்யவில்லை.

Related Stories: