மதுரையில் 7 தளங்கள் கொண்ட கலைஞர் நினைவு நூலகம் ஓராண்டுக்குள் கட்டி முடிக்கப்படும்!: அமைச்சர் ஏ.வ.வேலு உறுதி..!!

மதுரை: மதுரையில் 7 தளங்கள் கொண்ட கலைஞர் நினைவு நூலகம் ஓராண்டுக்குள் கட்டி முடிக்கப்படும் என்று பொதுப்பணித்துறை அமைச்சர் ஏ.வ.வேலு உறுதிபட தெரிவித்துள்ளார். மதுரையில் 70 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இரண்டு லட்சம் சதுர அடி பரப்பளவில் கலைஞர் நினைவு நூலகம் அமைக்கப்படவுள்ளது. 

இந்த கட்டிடம் கட்டுவதற்கு பரிந்துரைக்கப்பட்ட 6 இடங்களை அமைச்சர்கள் ஏ.வ.வேலு, பழனிவேல் தியாகராஜன், மூர்த்தி ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஏ.வ.வேலு, மதுரையில் கலைஞர் நினைவு நூலகம் கட்டுவதற்கு பரிந்துரைக்கப்பட்ட 6 இடங்களை ஆய்வு செய்தோம். 

இந்த நூலகம் அமையவுள்ள இடத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெகு விரைவில் அறிவிப்பார் என்று கூறினார். மதுரையில் 7 தளங்களோடு கூடிய கலைஞர் நூலகம் 24 பகுதிகளாக பிரிக்கப்பட்டு பொதுமக்கள் தனித்தனியே நூல்கள் படிப்பதற்கு ஏற்றவகையில் அமைக்கப்படும் என்று அமைச்சர் ஏ.வ.வேலு தெரிவித்தார். மேலும் மதுரையில் நூலகம் அமைவது மிகவும் சாலச்சிறந்தது என்றும் அவர் குறிப்பிட்டார். 

Related Stories: