தேஷ்முக் வீட்டில் அமலாக்கத்துறை திடீர் சோதனை

புதுடெல்லி: மகாராஷ்டிரா உள்துறை அமைச்சராக இருந்த தேஷ்முக், உணவகங்கள், பார்களில் இருந்து மாதந்தோறும் ₹ 100 கோடி வசூலித்து தர கூறியதாக மும்பை மாநகர போலீஸ் கமிஷனர் பரம் பீர் சிங் குற்றம் சாட்டினார்.  இதையடுத்து, சிபிஐ, அமலாக்கத்துறை அவர் மீது வழக்குப்பதிவு செய்து தனித்தனியே விசாரித்து வருகிறது. கடந்த மாதம், சிபிஐ எப்ஐஆரின் அடிப்படையில் அவர் மீது பண மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் மேலும் ஒரு வழக்குப்பதிவு செய்தது. இந்நிலையில், தேஷ்முக்கின்  நாக்பூர், மும்பை இல்லம், அலுவலகங்களில் அமலாக்கத் துறையினர் நேற்று சோதனை நடத்தினர். இதில் பல்வேறு முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Related Stories: