அமெரிக்காவின் மியாமி கடற்கரை அருகே 12 மாடி கட்டிடம் இடிந்து 160 பேர் பலி?...மீட்புப் பணி தீவிரம்

வாஷிங்டன்: அமெரிக்காவில் 12 மாடி அடுக்குமாடி குடியிருப்பு இடிந்து விழுந்ததில் 160 பேர் பலியாகினர்.  அமெரிக்காவில் உள்ள புளோரிடா மாகாணத்தில், உலகின் மிகவும் அழகான மியாமி கடற்கரை அமைந்துள்ளது. இதன் எதிரே ஏராளமான அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளன. அவற்றில் ஒன்றுதான், ‘சாம்ப்ளைன் டவர்’.  12 மாடிகளை கொண்ட இந்த குடியிருப்பின் தெற்கு பகுதியில் மட்டுமே 100க்கும் மேற்பட்ட வீடுகள் (பிளாட்ஸ்) உள்ளன. இவற்றில் பராகுவே, கொலம்பியா, வெனிசுலா, அர்ஜென்டினா, உருகுவே  போன்ற நாடுகளைச் சேர்ந்தவர்கள் அதிகமாக வசிக்கின்றனர்.

இந்நிலையில், நேற்று அதிகாலையில் இந்த கட்டிடம் திடீரென இடிந்து விழுந்தது. இதுவரையில் 30க்கும் மேற்பட்டோர் காயங்களுடன் மீட்கப்பட்டு உள்ளனர். சிலர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். காயமடைந்தவர்களில் பலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. ஆனால், கட்டிட இடிபாடுகளின் அடியில் சிக்கி உள்ள 160 மேற்பட்டோரின் கதி என்னவானது என்று தெரியவில்லை. மனிதர்களின் குரலை பதிவு செய்யும் கருவிகள் பொருத்தப்பட்டு, இடிபாடுகளின் உள்ளே சிக்கி இருப்பவர்களை மீட்க தீவிர முயற்சி மேற்கொள்ளப்பட்டு உள்ளது.

இருப்பினும், ‘30 அடி உயரத்துக்கு இடிபாடுகள் பிரமாண்ட குவியலாக இருப்பதால், மீட்புபணி எளிதாக இருக்க வாய்ப்பில்லை.  இடிபாடுகளில் சிக்கிய 160க்கும் மேற்பட்டோர் இறந்திருக்கக் கூடும். மீட்புப்பணிகள் முடிந்த பிறகே, உயிர்ச் சேதம் பற்றிய துல்லியமான எண்ணிக்கை தெரியும்,’ என்று மீட்புப்படை அதிகாரிகள் கூறினர்.

30 ஆண்டுக்கு முன்பே எச்சரிக்கை

இந்த கட்டிடம் 1981ல் கட்டப்பட்டது. 1990ம் ஆண்டிலேயே இது அபாயகரமாக இருப்பதாக, அமெரிக்க அதிகாரிகள் நடத்திய ஆய்வில் எச்சரிக்கப்பட்டு உளளது.   இந்த கட்டிடம் திடீரென இடிந்து விழுந்ததற்கான காரணம் தெரியவில்லை. அது பற்றி அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

Related Stories: