கொரட்டூர் செவிலியரை தொடர்ந்து மேலும் 2 பேருக்கு டெல்டா பிளஸ் வைரஸ்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

சென்னை:  கொரட்டூரை தொடர்ந்து தமிழகத்தில் மேலும் 2 பேர் டெல்டா பிளஸ் வைரசினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை  அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார். வெண்புள்ளிகள் விழிப்புணர்வு  பெற்ற உலகின் முதல் மாநிலமாக 2023ல் தமிழ்நாட்டை உருவாக்க முதல் விழிப்புணர்வு பொம்மலாட்ட வீடியோவை மக்கள்நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்டார். பின்னர்  அவர் நிருபர்களிடம் கூறியதாவது:  டெல்டா பிளஸ் வைரசினால் ஒருவர் பாதிக்கப்பட்டு இருந்தார். மேலும் பெங்களூருக்கு ஆய்வுக்கு 1,100க்கும் மேற்பட்ட மாதிரிகள் அனுப்பிய நிலையில் கொரட்டூர் செவிலியரை தொடர்ந்து, காஞ்சிபுரம், மதுரையை சேர்ந்த மேலும் 2 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: