உலகம் அதிர்ச்சி!: மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தில் ஆயிரம் வாடிக்கையாளர்களின் கிரெடிட் கார்டு, ஓட்டுனர் உரிமம் குறித்த தகவல்கள் கசிவு...!! Jun 25, 2021 மெர்சிடிஸ் பென்ஸ் அட்லாண்டா: சொகுசு கார்கள் தயாரிப்பு மற்றும் விற்பனையில் உலகில் முன்னணியில் இருக்கும் மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தில் ஆயிரம் வாடிக்கையாளர்களின் விவரங்கள் பொதுவெளியில் கசிந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சொகுசு கார், பேருந்துகள் தயாரிப்பில் சிறந்து விளங்கும் மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்திற்கு உலகம் முழுவதும் பல லட்சம் வாடிக்கையாளர்கள் உள்ளனர். இந்நிலையில் அட்லாண்டாவில் செயல்படும் தலைமையகத்தில் வாடிக்கையாளர்களின் தகவல்கள் திருடப்பட்டதாக அந்நிறுவனம் கூறியுள்ளது. சுமார் ஆயிரம் வாடிக்கையாளர்களின் பெயர், முகவரி, தொலைபேசி எண், மின்னஞ்சல் முகவரி, ஓட்டுனர் உரிமம் எண் மற்றும் கிரெடிட் கார்டு விவரங்கள் திருடப்பட்டதாக மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் கூறியுள்ளது. வாடிக்கையாளர்கள் தகவல்கள் பராமரிக்கும் நிறுவனம் இதுகுறித்து விசாரணை நடத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2014 ஜனவரி முதல் 2017 ஜூன் வரை இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட தகவல்கள் மட்டுமே கசிந்துள்ளதாக மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் கூறியுள்ளது. உலகின் முன்னணி நிறுவனத்தில் வாடிக்கையாளர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.
முள்ளிவாய்க்கால் இறுதிப்போர்; 15ம் ஆண்டு நினைவுதினத்தை அனுசரித்த இலங்கை தமிழர்கள்: பெண்கள் உட்பட பலர் கைது
போர்க்களமாக மாறிய தைவான் நாடாளுமன்றம்.. அடிதடியில் ஈடுபட்ட உறுப்பினர்கள்; சட்ட மசோதாவை தூக்கிக் கொண்டு ஓடிய உறுப்பினரால் பரபரப்பு!!
சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் காற்றாலை திட்டம் : அதானி நிறுவனத்திற்கு எதிராக இலங்கை உச்சநீதிமன்றத்தில் வழக்கு!!
காசாவில் இந்திய ராணுவ வீரர் உயிரிழப்புக்கு மன்னிப்பு கேட்ட ஐநா: இந்திய தூதரக, இஸ்ரேல் அரசு அதிகாரிகள் அஞ்சலி
சென்னையில் இருந்து இஸ்ரேலுக்கு ஆயுதங்கள் ஏற்றிச் சென்ற கப்பலை தங்கள் நாட்டு துறைமுகத்தில் நிறுத்த ஸ்பெயின் அனுமதி மறுப்பு
ராணுவப் புரட்சியின் போது மனித உரிமை மீறலுக்கு அதானி நிறுவனம் துணை போனதாக நார்வே வங்கி பரபரப்பு குற்றச்சாட்டு
நாடாளுமன்ற உறுப்பினர் உள்ளிட்ட பதவிகளில் இந்திய அமெரிக்கர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளது: அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் பேச்சு
ஈரானில் 8 மாதமாக சிறையில் தவிக்கும் இந்திய கப்பல் பணியாளர்கள் 40 பேரை விடுவிக்க கோரிக்கை: ஒன்றிய அமைச்சர் நேரில் வலியுறுத்தல்